வல்லமையினால் மீட்பு REDEMPTION BY POWER 1.உங்களுக்கு தயவான நன்றி மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவு இங்கே இருந்து தம்முடைய அன்புள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீண்டுமாய் உங்களுக்கு செய்தி கொடுப்பது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது, தேவனுடைய ஜனங்களை எந்த இடத்திலும் சந்தித்து அந்த மகத்தான நாம்மான இயேசுவைக் குறித்து பேசுவது எப்பொழுதுமே சிலாக்கியமாக இருக்கிறது. நம்முடைய சகோதரன் இப்பொழுது பாடின பாடலை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். அது என்னுடைய விருப்பமானதாய் இருக்கிறது. இயோவானவரை வெறும் ஒரு தீர்க்கதரிசியாய் அல்லது ஒரு நல்ல மனிதனாய் அல்லது ஒரு உபாத்தியாய் ஆக்க அவள் முயற்சித்துக் கொண்டுஇருந்ததான அந்த நாளின் போது உண்மையில் அது அவரின் தெய்விகத்தையே கொண்டு வந்தது; அவர் அதுவாகத்தான் இருந்தார். அவர் அவ்விதமாகவே இருந்தார். என்று தான் நம்புகிறேன். 2. அவரைப் போல ஒருவரும் பூமியின் மேன் இருந்ததே இல்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதுமில்லை. அவர் இம்மானுவேலாக இருந்தார். அவர் அல்பாவும் ஒமெகாவும். ஆதியும் அந்தமுமாய் இருந்தார். அவர் இருந்தவரும். இருப்பவரும் வருகிறவருமாய் இருக்கிறார். தாவீதின் வேரும் சந்ததியுமாய் விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார். அவருக்குள் தெய்வீகத் தன்மை வாசமாய் இருக்கிறது. அவருக்குள் தேவன் இருந்தார். “தேவன் அவருடைய குமாரனுக்குள் கிறிஸ்துவுக்குள்ளிருந்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார்”.இயேசு, “கிரியைகளைச் செய்கிறது நான் அல்ல என்னில் வாசமாய் இருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்கிறார். நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார். தேவன் மாம்சத்தில் பிரத்தியட்சமானார். தேவன் நம்மோடு கொண்டுள்ள அன்பின் வெளிப்படுத்துதல் என்ன ஒரு அற்புதமாய் இருக்கிறது! அவர் தன்னை வெளிப்படுத்திட கீழே இறங்கி வந்து மனித மாம்சத்தில் வாசம் செய்து, அதனால் பாவத்தையும் வியாதியையும் மனித இனத்திலிருந்து நீக்கி மீண்டுமாய் பிதாவிடம் வரும்படி நம்மை மீட்டார். அது அற்புதமாய் இருக்கிறதல்லவா? நாம் நிச்சயமாக அதைப் பாராட்டுகிறோம். 3. இப்பொழுது கடந்த இரவு... ஒருவிதமாய் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யூகிக்கிறேன். பில்லி சற்று துரிதமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விட்டான். ஏனென்றால் நான் ஒருவகையான பெலவீனம் ஆகிவிட்டேன். ஆனால் அந்தக் கூட்டங்கள், அந்த வகையறுத்தல்... அது என்னவென்று ஒருவராலும் ஒருபோதும் அறிய முடியாது. பெலவீனப்படுதல் அது அவ்விதமானதே. அதை அறிய வேண்டுமானால் நீங்கள் அதற்குள்ளாக வரவேண்டும். அதை விளக்கிக் கூறுவதற்கு வேறு வழியே இல்லை. அதை நீங்கள் செய்வதற்கும் ஒரு வழியும் இல்லை. அது வெறுமனே ஒரு அனுபவமாய் இருக்கிறது. ஒருவருக்கும் அதை குறித்துத் தெரியாது. அது மானிடவர்க்கத்திற்கு, ஒரு மனிதனுக்கு என்ன செய்கிறது என்பதை அதனூடாகப் போகிறவர்கள் மட்டுமே அறிவார்கள். அதே ஜீவியத்தை அந்த நபருக்குள் கொண்டு வருகிறது. நல்லது நீங்கள் இரண்டு உலகங்களில் ஜீவிக்கிறீர்கள். நீங்கள் இங்கே இருக்கின்ற ஒரு உலகத்தில் ஜீவிக்கிறீர்கள். அங்கே இருக்கின்ற உலகத்திலும் நீங்கள் இருக்கிறீர்கள். ஒருவேளை ஐம்பது வருடங்களுக்கு முன் நீங்கள் வேறு தேசத்தில் வேறு யாரோடாவது இருப்பது போல, பிறகு நீங்கள் இன்றிலிருந்து அனேசு, ஆண்டுகளுக்கு முன் யாருடனோ இருப்பதாகவும்; இங்குள்ள மேடைக்கு வந்து நிற்கிறீர்கள் என்பதையும்; மேலும் அனேசு, அனேக வருடங்களுக்கு முன், வாரங்களுக்கு முன், மாதங்களுக்கு முன் நடந்த ஏதோ ஒன்றைப் பற்றியும் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதையும் உணருகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் உங்களை உங்கள் நினைவுகளிலிருந்து சரி செய்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். அது ஒரு விதமாய் இருக்கிறது. ஆனால் கர்த்தர் இது மட்டுமாய் அதில் நம்மை ஆசீர்வதித்து இருக்கிறார். நாம் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம். கூட்டங்களிலிருந்து தேவன் மகிமையைப் பெற்றுக் கொள்கிறார் என்று இப்பொழுது நம்பிக்கையாய் இருக்கிறோம். 4. இப்பொழுது இன்றிரவு ஆராதனையில் நாம் கொஞ்சம் பேராக ஒன்று கூடி வந்திருக்கிறோம். (நம்முடைய கூட்டங்கள் இங்கே உள்ளூரில் மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டது. அது இங்குள்ள ஜனங்களுக்கு மட்டுமே). நாம் கூட்டத்தின் பெரும் பகுதிக்கு செல்வதற்கு முன்பாக இன்றைக்கு அதாவது வேதாகமத்திலிருந்து பழைய பாணியின் உபதேசத்தை ஒருக்கால் உங்களுக்கு கொடுக்க முயற்சிப்பேன் என்று நான் இந்த விதமாக நினைத்துக் கொண்டு இருந்தேன். மகத்தான சம்பவமானது வரும்போது தேவன் நமக்கு அதை அனுப்புவாரானால் அப்போது நாம் அதை மேலான விதத்தில் அறிந்து கொள்ள முடியும். 5. பார்க்கப் போனால் நீங்கள் அறிந்திருக்கிறபடி தெய்வீக சுகமானது மீன் பிடிப்பதற்கு தூண்டிலில் வைக்கும் இரையைப் போன்று இருக்கிறது. அதைத்தான் மீனானது பார்த்து இரையைப் பிடுங்கி அந்த கொக்கியை விழுங்குகிறது. எனவே இயேசு கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை வென்று எடுப்பது என்பது நம்முடைய முக்கியமானதும் நம்முடைய இறுதி நோக்கமுமாய் இருக்கிறது. தேவன் இன்றிரவு உங்களை சுகப்படுத்தினால் நீங்கள் மரிப்பதற்கு முன்பாக ஒருக்கால் மீண்டுமாக சுகவீனமாகலாம். இப்போதிலிருந்து ஒரு வருடம், இரண்டு வருடத்தில் மீண்டுமாக சுகவீனமாகலாம். இப்போதிலிருந்து ஒரு வாரம் அல்லது ஒரே நாளில் மீண்டும் சுகவீனமாகலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே ஒரு காரியம் நிச்சயம் இந்நாட்களில் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறீர்கள். ஏனெனில் இது வெறுமனே ஒட்டுப் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த ஆத்துமா எப்பொழுதாவது பரிசுத்த ஆவியோடு தொடர்பு கொண்டு மறுபடியும் பிறந்திருந்தால் நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருப்பீர்கள். இங்கே என்ன சம்பவித்தாலும் அக்கறை இல்லை. நீங்கள் ஒருபோதும் அழிந்து போவதில்லை. “என்னுடைய வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு”, என்று இயேசு சொன்னார். அது நிகழ்காலம். “அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டுவிட்டான் (இறந்தகாலம்)”, என்றார். நாம் எல்லோரையும் மெத்தடிஸ்டுகளாக ஆக்கி சத்தமிடச் செய்யும். அது அப்படி செய்யாதா? தேவன் அதை செய்தார் என்று நினைப்பது சரிதான். அது என்னுடைய வார்த்தை அல்ல அது அவருடையது. (பரி. யோவான் - 5:24) 6. பரிசுத்த யோவான் 6 ல், “என் மாமிசத்தைப் புசிந்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்”, என்று இயேசு சொன்னார். அது சரியே. என் மாமிசத்தைப் புரித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் முடிவில்லாத ஜீவனைக் கொண்டிருக்கிறான். (அது நிகழ்காலமாக இருக்கிறது) என்று இயேசு சொன்னார். இப்பொழுது இந்த முடிவில்லாத ஜீவன் இது ஒரு எழுப்புதலிலிருந்து இன்னொரு எழுப்புதல் மட்டுமாய் அல்ல; ஆனால் நித்தியத்தின் ஊடாகப் போகின்றது. இப்பொழுது இங்கே உட்கார்ந்து இருக்கிற போதகர்கள் சிலர் நித்திய ஜீவனானது தேவனுடைய ஜீவன் என்று அர்த்தம் கொண்டுள்ள அதே வார்த்தையிலிருந்து வந்தது என்று அறிந்திருக்கிறார்கள். ஸோயீ (ZOE) என்ற கிரேக்க பதத்திற்கு தேவனுடைய சொந்த ஜீவன் என்று பொருள். 7. அப்படியானால் நாம் தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தியாக தேவனுடைய ஒரு சந்ததியாக ஆகும்போது தேவனுடைய ஜீவனின் ஒரு பகுதியை நமக்குள் பெறுகிறோம். நாம் சோதிக்கப்படும்போது தேவன் அழியாதிருக்கிறது போன்று நாமும் இனி அழிந்து போக முடியாது. எனவே நாம் அழிவில்லாத ஜீவனை உடையவர்களாய் இருக்கிறோம். கடைசி நாளில் நாம் எழுப்பப்படப் போகிறோம். (சபையார் “ஆமென்” என்கிறார்கள்) இது அற்புதமாய் இல்லையா. அது பாப்டிஸ்டுகளையும், மெத்தோடிஸ்டுகளையும் கரம் குலுக்கவும் சத்தமிடவும் செய்யும். அவ்விதம் அது செய்யாதா? அது நிச்சயமாகச் செய்யும். அது சரியே! பழங்கால பக்தியைக் குறித்து நல்ல காரியம் இதுதான். அது எல்லோரையும் ஒன்று கூட்டி உட்காரச் செய்து ஒருவரோடொருவர் நேசிக்கும்படி செய்கிறது. நிச்சயமாய் அதைச் செய்யும் எல்லா வித்தியாசங்களையும் தூரமாக்கி புதிய சிருஷ்டிகளாகச் செய்கிறது. அது ஒரு டெக்ஸ்ஸிடோ சூட்டை அணிந்து கொண்டிருப்பவர். வேலையில் உடுத்தும்படி ஆடையுடன் வந்துள்ளவரிடம் அவர்களுடைய கரங்களை ஒருவர் இன்னொருவர் மேல் போட்டு அணைத்து சகோதரனே எப்படி இருக்கிறீர்கள் என்று கூறும்படி செய்கிறது. அது சரியே! அது நிச்சயமாக செய்யும் அது ஒரு பட்டாடையும் ஒரு சாதாரண உடையும் அணிந்துள்ள அவர்களுடைய கரத்தை அவர்கள் மேல் போட்டு அணைத்து; சகோதரியே நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லும், அதைத்தான் அது செய்யும். அது நிச்சயமாய் செய்யும். அது வித்தியாசங்களைக் கிழித்தெறியும். “ஐஸ்வரியவானோ, அல்லது ஏழையோ, அடிமையோ, அல்லது சுயாதீனனோ, எல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறோம்”, என்று கூறும். 8. ஞாயிற்று கிழமை ஜெபக்கூடாரத்தில் ஒரு கூட்ட ஜனங்கள் முழுமையாக உட்கார்ந்திருக்கிறதைக் காண்கிறேன்... எங்களுக்கு இரத்தத்தினால் மீட்பு என்று ஞாயிறு பாட சாலை பாடம் இருந்தது. இரத்தத்தினால் மீட்பு என்பதில் அவ்வளவாய் முழுகி நான் எங்கோ இன்னொரு ஆகாய மண்டலத்தில் இருப்பது போன்று உணர்கிறேன்; இரத்தத்தில் மீட்பு. இன்று இரவு குடும்பம் போன பிறகு இங்கே சீக்கிரமாய் வந்து பாடல் ஆராதனை முதலானவைகளை கேட்கும்படி நான் வந்தேன். நான் என் அறையில் இருந்த போது நான் வேத வார்த்தைகளை வாசிக்கத் தொடங்கி ஏதோ காரியத்தைக் கண்டேன். நல்லது கர்த்தருக்குச் சித்தமானால் அதைக் குறித்து இன்று இரவு சிறிது நேரம் பேசலாம் என்று நினைத்தேன். அது இரத்தத்தினால் மீட்பு என்பது ஞாயிறு பேசினது; இப்பொழுது, இன்று இரவு வல்லமையினால் மீட்பு என்று பேசப் போகிறேன். நாளை இரவு (கர்த்தருக்குச் சித்தமானால்) நான் சந்தோஷத்தின் முழுமையில் மீட்பு என்பதின் பேரில் பேச இருக்கிறேன். இரத்தத்தில், வல்லமையில், மற்றும் சந்தோஷத்தில் மீட்பு! 9. இப்பொழுது அனேக ஜனங்கள் அருமையாக கற்று பாண்டித்தியம் பெற்றவர்களாய் இருப்பதால் எப்படி உடைத்துக் கொண்டு போய் இந்த விதமான வெளிப்பாட்டைக் கொடுக்க முடியும். இதற்காக அல்லது அதற்காக அல்லது சிலவற்றை தள்ளிவிட்டு... ஆனால் நானோ படிப்பறிவு இல்லாத பிரசங்கிமார்களில் ஒருவனாக இருப்பதால் எனக்குத் தெரிந்த ஒரு காரியம்; சரியானதற்கு மிக நெருக்கமாக நிச்சயமாக உள்ள நிழல்களுக்குப் போவதே ஆகும். நான் சுவரை நோக்கி நடந்து போகும் போது வெளிச்சம் இந்த பக்கமாக இருந்தால் நான் எப்படி இருக்கிறேன் என்று கூற முடியும். எந்த விதமான நிழலை பிரதிபலிக்கிறேன் என்று நான் கண்டால், நான் ஒரு நாலுகால் மிருகமா அல்லது பறவையா அல்லது அது என்னவென்று என்னால் கூற முடியும். 10. இப்பொழுது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருக்கிறது. அது ஒரு நெகட்டிவ் (தெளிவில்லாததாய்) (NEGATIVE) இருந்தது, சூரியனுக்கு சந்திரன் இருப்பது போன்று சூரியன் நிலவின் மேல் பிரகாசித்ததை பூமியின் மேல் பிரதிபலிக்கிறது. நான் பழைய ஏற்பாட்டை நேசிப்பதைப் போன்று; அல்லது அது இருக்கக் கூடிய விதத்தில் உவமைகளாய் இருக்கிறது. இப்பொழுது சரியானது... ஆதியாகமத்தில் முதலாவது தேவன் சூரியனையும் அடுத்து சந்திரனையும் உண்டாக்கின போது, அந்த சந்திரனும் சூரியனும் சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பிரதியுத்திரமாக இருக்கிறது. சூரியனானது அது வல்லமையினாலும் மகிமையினாலும் எழும்பி வருகிறதைப் போன்று அது கீழே திரும்பிப் போகின்ற போது: சூரியன் இல்லாத போது; பூமிக்கு வெளிச்சம் தரும்படி இருளான சமயத்தில் அது தன்னுடைய வெளிச்சத்தை சந்திரனின் மேல் பிரதிபலிக்கிறது. இயேசுவும் மகிமைக்குள் சென்றபிறகு, அவர் திரும்பி வரும் வரைக்கும் சுவிசேஷ வெளிச்சத்தை சபை கொடுக்கும்படியாய் பிரதிபலித்தார். (ஓ. என்னே), அதற்குப் பின்னர் அவர்கள் மணந்து கொள்வார்கள். அது அற்புதமானது. அது ஒரு மகத்தான சந்திர வெளிச்சமாய் இருக்கும். “ஆட்டுக்குட்டியானவரே வெளிச்சமாய் இருப்பார்”. அவர்களுக்கு அந்த நகரத்தில் சூரியன் தேவையாய் இருக்காது. 11. இப்பொழுது ஒரு சிறு முன் காட்சியாய் யாத்திராகமத்துக்கு செல்வோம். யாத்திராகமத்தில் நான் பேசுவதைக் குறித்து நீங்கள் களைத்துப் போகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒரு சமயம் நதியின் குறுக்கே என்று என்னுடைய சபையில் பிரசங்கித்தேன். நான் நினைக்கிறேன். ஒன்றரை வருடங்களாக ஒவ்வொரு இரவும் யோபுவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று யோபுவில் இருந்து சிறு பகுதியை எடுத்து அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டே போனால், நம்மால் வேதத்தின் ஊடாகப் போக முடியும். ஒவ்வொரு வேத வார்த்தையும் ஒன்றோடு ஒன்று இணையும்; தேவனுடைய வார்த்தையில் முரண்பாடே இல்லை. ஒவ்வொரு பாகமும் பரிபூரணமாய் இருக்கும். அந்த விதமாக ஏவப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகம் பரிபூரணமாய் இருக்கும். அநேக எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு இடையில் பரிசுத்த ஆவியால் பேசப்பட்டு அப்படியே அவர்களால் எழுதப்பட்டு ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறது. அந்த காரணத்தினால் தான் கூடுதலான புத்தகங்களாகிய மக்காபீக்கள்,... (MACCABEES) மற்ற எந்தக் காரியங்களும் இணைந்து போவது இல்லை. எனவே அவைகளை நான் ஏற்றுக் கொள்வது இல்லை. இது எனக்கு தேவனுடைய வார்த்தையாக உள்ளது. 12. யாரோ ஒரு ஸ்திரீ எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தாள். அப்பொழுது யோபு சாம்பல் குவியல் மேல் இருந்ததை பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அதில் அவள், “சகோதரன் பிரான்ஹாம், நீர் நீண்ட நேரம் யோபுவை சாம்பல் குவியல் மேல் வைந்து இருக்கிறீர். நீர் அப்படி நினைக்கவில்லையா? சுமார் ஆறு வார காலமாய் சாம்பல் குவியல் மேல் இருக்கிறார். அவரை அந்த குவியல் மேல் இருந்து இறங்கச் செய்யப் போவதில்லையா?”, என்றிருந்தது. நான், பரிசுத்த ஆவியானவர் சொல்லும் போது நான் அதைக் குறித்து நிறுத்துவேன் என நான் யூகிக்கிறேன், என்றேன். ஆனால் சாம்பல் குவியல் மேல் அவன் இருக்கிறதைக் குறித்து ஆவியானவர் பேசிக் கொண்டு இருக்கும் வரைக்கும் நான் அதில் தரித்து நிற்பேன்; ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். என்றேன். 13. ஆக நகரத்துக்கு வந்த பிரசங்கியைப் போல் இருக்கிறது. ஒரு இரவு அவர் மனந்திரும்புதலைப் பற்றி பிரசங்கித்தார். அடுத்த இரவு அவர் மனந்திரும்புதலைப் பற்றி பிரசங்கித்தார். நான்கு அல்லது ஐந்து இரவுகளுக்கு பின்னர் டீக்கன் வாரியம் அவரை சந்தித்து சகோதரனே மனந்திரும்புதலின் காரியத்தை தவிர வேறு எந்த காரியத்தையும் பிரசங்கிக்க மாட்டீர்களா? என்றார்கள். அதற்கு அவர், “ஓ முடியுமே, முதலாவது அவர்கள் எல்லோரும் மனந்திரும்பட்டும். அதன் பிறகு வேறு ஏதாவது காரியத்தின் பேரில் பிரசங்கிப்பேன்”, என்றார். ஆக அது ஒரு நல்ல கருத்து: அவர்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பட்டும். அதன் பிறகு நாம் வேறொரு காரியத்தைப் பிரசங்கிக்கலாம். அது சரியே! 14. விசேஷமாக ஞாயிற்று ஞாயிற்று கிழமை காலை ஜெப கூடாரத்திற்கு வராதவர்களுக்காக, ஒரு சிறிய முன் காட்சியாக்கி, திரும்பி 12ஆம் அதிகாரத்திற்குப் போவோம். ஆனால் இன்றிரவு நம்முடைய அடிப்படை எண்ணம் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. 13ம் வசனத்தில் துவங்கலாம். இப்பொழுது இரத்தத்திலான மீட்பை நாம் ஞாயிறு காலையில் 10ம் வசனத்தில் விட்டோம். உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த வரலாறு தெரியும் என்று நிச்சயமாகக் கூறுவேன். இப்போது நம்மால் அந்த புத்தகத்தின் தாள்களைப் புரட்டி இந்தப்பக்கங்களை நம்மால் திருப்ப முடியும். ஆனால் ஒருவர் மாத்திரமே புத்தகத்தை திறக்க கூடியவர். அவர் தான் இயேசு கிறிஸ்து. யோவான் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான். அது முத்திரிக்கப்பட்டு இருந்தது. அவன் அழுதான். ஏனென்றால் அங்கே அதை திறக்கும்படி பரலோகத்தில் ஒருவரும் இல்லை. பூமியிலும், அதன் கீழாகவும் ஒரு மனிதனும் இல்லை. ஆனால் அங்கே ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி இருந்தது. அது உலகத்தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்டதாய் இருந்தது. அவர் வந்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவரிடம் புத்தகத்தை வாங்கி முத்திரைகளை உடைத்து புத்தகத்தை திறந்து முத்திரைகளை அவிழ்த்துவிட்டார். அவர் உலகத்ததோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்டவராய் இருந்தபடியால் அவர் பாத்திரவானாய் இருந்தார். இன்றிரவு நாம் அவரிடத்தில் பேசுவோம். இப்பொழுது அவர் நமக்காக அதை திறக்கும்படியாய் நாம் அவரைக் கேட்போம். 15. இப்பொழுது தயவும் அன்புமுள்ள பிதாவே இயேசுவின் நாமத்தில் முதலாவதாக உம்மை அழைத்துக் கொண்டு உம்மிடத்தில் வருகிறோம். வெளியே புயல் சீறிக் கொண்டிருக்கையில், மழை சுற்றி அடித்துக் கொண்டிருக்கையில் இந்த கூரையின் கீழ் அடைக்கலமாய் நின்றவாறு இன்றிரவு இப்பொழுது நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உள்ளே வரத்தக்கதாய் தேவனுடைய வீடு இருக்கிறதற்காக நாங்கள் அவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அங்கே ஒரு துருகம் ஒரு அடைக்கலம் இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். “கர்த்தருடைய நாமம் ஒரு பலத்த துருகமாய் இருக்கிறது, நீதிமான் அதற்குள்ளாக ஓடி சுகமாய் இருப்பான்”, என்று நீர் சொன்னீர். நாங்கள் கர்த்தருடைய நாமத்தை அறிந்து அதற்குள்ளாக வந்து இருக்கிறபடியினாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இன்றிரவு பிதாவே நீர் எங்களுக்கு வார்த்தையைத் திறந்து கொடுக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து வார்த்தைக்குள் செல்லுவாராக. இந்தத் தாழ்மையான ஏழை ஊழியக்காரனின் உதடுகளையும் இதைக் கேட்கிற உம்முடைய பிள்ளைகளின் இருதயங்களையும் விருந்தசேதனம் செய்வீராக. பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வார்த்தைகளை எடுத்து எங்கே அது தேவையாக இருக்கிறதோ அந்த இடத்திலே பொருத்துவீராக. இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய சிந்தனைகளை உம்முடைய ஆவிக்குள்ளாக புதுப்பியும். இந்த ஆராதனையிலிருந்து மகிமையை எடுத்துக் கொள்ளும். இழக்கப்பட்டவர்களை இரட்சியும், வியாதியஸ்தரை சுகப்படுத்தும். பின்வாங்கிப் போனவர்களைக் கர்த்தாவே வீட்டிற்கு திருப்பிக் கொண்டு வாரும். நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறோம். உம்முடைய அன்பான குமாரனாகிய இயேசு என்னும் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16. இப்பொழுது யாத்திராகமம் 12ம் அதிகாரம் 10ம் வசனத்திற்கு திருப்புவோம். நாம் இரத்தத்திலான மீட்புக்கு எப்படி தேவன் ஒவ்வொரு வீட்டிற்கும் அடிக்கப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை நியமித்தார் என்றும் அதில் ஒன்றும் மீதியாக வைக்கப்படக் கூடாது என்பதைக் குறித்தும் வாசித்துக் கொண்டு இருந்தோம். நியாயத்தீர்ப்புகள் விழுந்து கொண்டிருந்தன. கடைசி நியாயத்தீர்ப்பு கூட ஆயத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின்படியாக தேவன் அவருடைய வார்த்தையை திறைவேற்றப் போகிறார். முன்னர் இருந்ததான எல்லா நியாயத்தீர்ப்புகளும் அங்கே ஒரு பரிபூரண அடையாளமாய் இருந்தது. அல்லது இப்போது விழுவதற்கு ஆயத்தமாயிருக்கின்ற நியாயத்தீர்ப்புகளுக்கு ஒரு பரிபூரண பாவனையாய் இருக்கின்றது. நீங்கள் கவனிப்பீர்களானால் நியாயத்தீர்ப்பு விழுவதற்கு முன்னரே... போதகர்கள் என் பேரில் இப்போது ஒருக்கால் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அதெல்லாம் பரவாயில்லை; ஆனால் நியாயத்தீர்ப்பு எகிப்தை தாக்குவதற்கு முன்னதாகவே தேவன் இஸ்ரவேலை கோசோனுக்கு அனுப்பினார். அவர்கள் கோசோனில் இருந்தார்கள். அவர்களின் மேல் ஒரு வாதையும் விழவில்லை. உபத்திரவத்தின் ஊடாக போகப் போகிற சபைக்கு இது ஒரு பரிபூரண பாவனையாய் இருக்கிறது. பாருங்கள், சரியே! 17. பின்னர் பூமியை அல்லது எகிப்தை தாக்கின கடைசி வாதை... மரணமாய் இருந்தது. இங்கே இருக்கின்ற வேதத்தை வாசிக்கிறவர்களாகிய நீங்கள், உங்களுடைய ஞாயிறு பாடசாலை பாடங்கள் முதலானவற்றை அறிந்திருக்கிறவர்கள், ஒருக்கால் அனேக முறை இதைக் குறித்து பேசி இருக்கலாம். ஆனால் எகிப்தை தாக்கின கடைசி சத்துரு மரணமாய் இருந்தது. ஆவிக்குரிய பிரகாரமாக பேசுகையில் இப்போது சபையை தாக்க இருக்கின்ற கடைசி சத்துரு மரணமாய் இருக்கிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்றாத சபைகள் யாவரும் ஆவிக்குரிய விதமாக காய்ந்து போய் மரித்துப் போவார்கள் என்பதை நீங்கள் இப்போது காணலாம். அனேகம், அனேகம் மகத்தான எழுப்புதல்களுடன் சுவிசேஷகர்கள் தேசத்தின் ஊடாக கடந்து சென்றனர். இருந்தபோதிலும் சபை என்கிறபோது அதாவது அரசியல் பிரகாரமான சபை, அது எல்லா நேரத்திலும் மோசமாகிக் கொண்டே போகிறது. அதனுடைய அங்கத்தினர்கள் அவர்கள் விரும்புகிற விதமாக ஜீவித்துக் கொண்டும் அவர்கள் விரும்புகின்ற எந்த காரியத்தையும் செய்து கொண்டும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு நாங்கள் சரியாய் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறோம் என்றால், கிறிஸ்துவைப் போன்று இருப்பது என்பதாகும். கிறிஸ்து வருவார் என்றால் நீங்கள் இருக்கக் கூடாது என்று விரும்புகிற இடத்திற்கும் போகமாட்டீர்கள். கிறிஸ்து வருவார் என்றால் நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிற காரியத்தைப் பேசமாட்டீர்கள். கிறிஸ்து வரும்போது நீங்கள் செய்து கொண்டு இருக்கிற காரியத்தைச் செய்யமாட்டீர்கள். கிறிஸ்து வரும் போது நீங்கள் சிந்திக்கக் கூடாத காரியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கமாட்டீர்கள். உங்களுடைய இருதயம் கல்வாரியின் மேல் பொருந்தினதாய் இருக்கும்படி உங்களுடைய உள் நோக்கத்தைக் காத்துக் கொள்ளுவீர்கள். ஆமென். அவர் ஒளியில் இருக்கிறது போல ஒளியில் நடவுங்கள். நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியமுள்ளவர்களாய் இருக்கிறோம். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது. அதுதான் மெத்தடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், நாம் எல்லோருமாக ஒன்று சேர்ந்து; நம் எல்லோரையும் அவருக்குள்ளாக ஒன்றாக ஆக்குகிறது. 18. இப்பொழுது கடைசிக் காரியம் மரணமாய் இருந்தது. அந்த மரணம் வருவதற்கு முன்னர் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வாஞ்சிக்கிறவர்களுக்கு அந்த மரணத்திற்காக அங்கே ஒரு பரிகாரம் செய்யப்பட்டிருந்தது. முதலாவதாக தண்ணீரினால் உலகம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அங்கே ஒரு பரிகாரம் செய்யப்பட்டிருந்தது. நீதியை பிரசங்கிக்கிற ஒரு பிரசங்கியை நோவாவை தேவன் உடையவராயிருந்தார். ஜனங்கள் பேழைக்குள்ளாக வரும்படியாக அவன் 120 வருடம் பிரசங்கித்தான். அதற்குள் போகிறதற்கு மனப்பூர்வமாய் மறுக்கிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. இன்றைக்கு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நடக்க மறுக்கின்ற மனிதன் இரக்கத்தை தள்ளிவிட்டவனாய் இருக்கிறான். எனவே அவனுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. அவ்வளவுதான். அங்கே இடது பக்கமும் வலது பக்கமும் இருந்தாலும் ஒரு பக்கம் தான் போக முடியும். ஆகவே உங்களுடையதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 19. இப்போது அந்த பயங்கரமான இரவு வருவதற்கு முன்னர் இஸ்ரவேலருக்கு அது கட்டளையிடப்பட்டது. செம்மறி ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். தேவன் தம்முடைய சபையை ஒரு யாத்திரைக்குள் கொண்டு வருகிறார். அதை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் கொண்டு செல்கிறார். எனக்கு அது பிரியம். அந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். தேவன் அவர்களுக்கு அந்த தேசத்தைக் கொடுத்தார். இருந்தபோதிலும் அவைகள் எல்லாம் மகத்தான கட்டிடங்களாலும் அரண்களாலும் அடைக்கப்பட்டிருந்தது. எரிகோவைச் சுற்றிலும் இருந்த சுவர்களில் இரதங்களின் ஓட்டப் பந்தயங்கள் வைக்கலாம். அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இருந்தபோதிலும் நான் அதை உங்களுக்கு கொடுத்தேன். அது உங்களுடையது என்று தேவன் கூறினார். ஆனால் அதை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும். சுத்திகரிக்க வேண்டும். 20. அதைத் தான் தேவன் இன்றைக்கு செய்தார். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் அதை விரும்புகிற யாவருக்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொடுக்கிறார். ஆனால் நீங்கள் உள்ளே போய் அதை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். வித்தியாசங்களை போராடி, சுவர்களை இடித்துத் தள்ளி, அங்கே கிரியையைத் துவக்கி அதை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். அது இன்றைக்கு நமக்கானது அல்ல என்று போதகர்கள் கூறுகிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் நேராக அதன் ஊடாக கடந்து செல்லுங்கள். நான் உன்னை வீட்டிலிருந்து துரத்திவிடுவேன் என்று தாயார் கூறுகிறார்கள் என்றால். நேராகப் போய் அதைக் கடந்து செல்லுங்கள். நான் உன்னை விட்டுவிடுவேன் என்று கணவர் கூறுகிறார் என்றால், நேராக கடந்து தொடர்ந்து செல்லுங்கள். அவ்வளவுதான் போய் அதை சுதந்தரித்துக் கொண்டே ஆக வேண்டும்.அவ்வளவுதான். தெய்வீக சுகமானது உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இங்கே புற்றுநோய், இருதயக் கோளாறு, என்னவாக இருந்தாலும் சரி அதனோடு இன்றிரவு உட்கார்ந்து இருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார். அது உங்களுடையது; ஆனால், நீங்கள் போய் அதை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். நான் நன்றாக இருக்கிறேன் என்று உணர முடியவில்லை என்று நீங்கள் கூறலாம். அதற்கு அதனோடு ஒன்றும் செய்வதற்கில்லை. வாக்குத்தத்தமானது உங்களுடையதாய் இருக்கிறது. தேவன் அதை உங்களுக்குச் கொடுத்திருக்கிறார். நேராக உள்ளே சென்று ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரைக்குமாய் பெலிஸ்தியரைக் கொன்று போடுங்கள். ஏத்தியர்களையும், அமோரியர்களையும் கொன்று அழித்து நேராக உள்ளே சென்று எடுத்துக் கொள்ளுங்கள். “அது உங்களுடையது போய் எடுத்துக் கொள்ளுங்கள்”. என்று தேவன் கூறுகிறார். 21. ஆனால் இப்பொழுது நான் உள்ளே போய் அதை எல்லாவற்றையும் சுத்தப்படுத்துகிறேன். நீங்கள் சில அருமையான பட்டணங்களை கட்டுவீர்கள். சுலபமாக தெருக்களில் உங்களை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. அந்த விதத்தில் அதை அவர் செய்யவில்லை. அவர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். நீங்கள் அதோடு ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. அவர் உங்களுக்கு தேசத்தை கொடுக்க போதுமானவராய் இருந்து நான் உனக்கு உதவி செய்வேன். உன்னோடு கூட இருப்பேன். போங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இன்றிரவு நீங்கள் சுகவீனமாயும், முடமாயும், குருடாயும், செவிடாயும், ஊமையாயும் இருந்தால் நீங்கள் வேறு என்னவாக இருந்தாலும் சரி போய் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடையது என்று தேவன் கூறுகிறார். அது உங்களுடைய சுதந்திர வீதமாக இருக்கிறது. தேவன் அதை உங்களுக்குக் கொடுத்தார். 22. அவர் அந்த தேசத்தை கொடுத்தேன் என்று அவர்களிடத்தில் அவர் கூறியிருந்தார். வழியில் அவர்களைக் காத்துக் கொள்ளவும் அது எங்கே இருந்ததோ அதற்குள்ளாக கொண்டு வரவும் அவர்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்பினார். வேவுக்காரர்கள் அங்கே சென்றபோது அவர்களை நோக்கிப் பாருங்கள் அவர்களில் பத்து பேர் திரும்பி வந்து, “ஓ, நம்மால் அதைச் செய்ய முடியாது. அது முடியாத காரியம், நாம் விஞ்ஞானிகளாய் இருக்கிறோம். அந்தக் காரியத்தை நாம் நேராகப் போய் பார்த்தோம். விஞ்ஞான ரீதியாய் அது கூடாத காரியம், நம்மால் அதைச் செய்ய முடியாது”, என்றார்கள். ஆனால் அங்கே இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் யோசுவா, மற்றவனின் பெயர் காலேப் என்பதாகும். விஞ்ஞானத்தின்படி என்னவாய் இருந்தது என்று அவர்கள் அதை நோக்கிப் பார்க்கவில்லை. அவர்களோ தேவன் என்ன கூறினார் என்பதையே நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள், “நம்மால் அதைச் செய்ய முடியும்”, என்று கூறினர். அது சரியாய் இருக்கிறது. அது ஒரு நல்ல தேசம் என்பதன் சில அத்தாட்சியை அவர்கள் கொண்டு வந்தனர். அந்த அத்தாட்சியைக் குறித்து நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன். உங்களுக்கு அப்படி இல்லையா? அதாவது இங்கே நமக்கு மேலாக ஒரு நல்ல தேசம் இருக்கிறது. இன்றிரவு நாம் அந்த பாதையை நோக்கியே இருக்கிறோம். அல்லேலூயா! அது சரியே! 23. மீட்புக்கு முன்னதாக இங்கே அவர்கள் இருந்தார்கள். உண்மையில் இஸ்ரவேல் பிள்ளைகள் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த செம்மறி ஆட்டுக்குட்டியை கொல்ல வேண்டியது அவர்களுக்குத் தேவையாய் இருந்தது. இந்த விதமாக ஒவ்வொரு வாசல்களிலும் நிலைக்கால்களிலும் இரத்தம் பூசப்பட வேண்டியதாய் இருந்ததை தேவன் கோரினார். அவர்கள் உள்ளே சென்று அந்த ஆட்டுக் குட்டியை ஒன்றையும் மீதம் வைக்காமல் புசிக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள். ஆட்டுக் குட்டி முழுவதையும் அதன் ஒரு பகுதியை அல்ல, அதனுள் எல்லா பகுதியையும் புசித்தாக வேண்டும். நான் இந்தப் பகுதியை எடுத்துக் கொள்கிறேன், நான் இந்தப் பகுதியை விசுவாசிக்கிறேன் என்று சில ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ அதை முழுவதுமாய் புசிக்க வேண்டும். அதில் எல்லாவற்றையும் புசிக்க வேண்டும். ஓ அவர் நம்முடைய மீறுதலுக்காகக் காயப்பட்டார் என்று நானும் விசுவாசிக்கிறேன். ஆனால் அவருடைய தழும்புகளால் அதைக் குறித்து ஒன்றும் தெரியாது என்கிறீர்கள். நமக்கு அது எல்லாமும் வேண்டியதாய் இருக்கிறது. அதன் ஒவ்வொரு துணிக்கையும் புசிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அது முழுவதுமாகப் புசிக்கப்படவேண்டும். அதில் சில கடினமாகிவிடுகிறது. ஆனால் நாமோ எப்படி இருந்தாலும் அதைப் புசித்தாக வேண்டும். தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார். 24. இப்பொழுது பத்தாம் வசனத்தை கவனியுங்கள். அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல்... அக்கினியால் சுட்டெரிப்பார்களாக. இப்பொழுது அதில் ஒன்றும் மீதியாக வைக்கப்படக் கூடாது. அவர், “அதைப் புசிக்கும்போது. பச்சையாயும், வெண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் இருக்க வேண்டாம். நீங்கள் அதை நன்றாக சமைத்து புசிக்க வேண்டும்”, என்று கூறினார். எனக்கு அது பிடிக்கிறது. ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைப் புசிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதை பச்சையாய் புசிக்கிறார்கள். அதை மென்று துப்பிவிடுகிறார்கள். மற்றெல்லா காரியங்களையும் செய்கிறார்கள். ஓ, அதை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் போதுமான அளவுக்கு அது சமைக்கப்படவில்லை. அவ்வளவுதான். அதை நெருப்பினால் சுடுங்கள். என்று அவர் கூறினார். நெருப்பு பரிசுத்த ஆவிக்கு பிரதியுத்தரமாக இருக்கிறது. முதலாவதாக உங்கள் இருதயத்தில் தேவனைக் கொண்டு வாருங்கள். அது உங்களுக்காக சமைக்கும். அது சரியே! அதை சுட்டு முடிக்கப்பட்டதாய் பக்குவப்படுத்தப்பட்டதாய் சமையுங்கள். அப்பொழுது நல்ல ருசியுள்ளதாய் இருக்கும். 25. இப்பொழுது இந்த விதமாக வெளியே நின்று ஓ! அது எனக்குத்தானா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒருக்கால் கடந்து போன காலத்துக்குரியது என்று நீங்கள் கூறலாம். நீங்கள் பரிசுத்த ஆவியை முதலாவதாகப் பெற்றுக் கொள்ளுங்கள், பின்பு தெய்வீக சுகம் என என்பதன் பொருள் என்னவென்று கவனியுங்கள். அங்கே வரும் ஆட்டுக் குட்டியை சமைக்க நீங்கள் பரிசுத்தாவியைப் பெற்றிருக்கும் போது, இருதயத்தால் உணரும் அந்த பக்தி என்னவென்பதை அப்பொழுது நீங்கள் கவனியுங்கள். ஆமென். அது உண்மை. முதலாவதாக ஆட்டுக் குட்டியை சமையுங்கள். அதை சமைக்க வேண்டுமானால் உங்களிடத்தில் நெருப்பு இருக்க வேண்டும். அது நன்றாகச் சுடப்பட வேண்டும். ஓ என்னே, அதாவது அப்பொழுது தான் அது நன்றாக இருக்கும். அதைச் சுடுங்கள் அது எல்லாவற்றையும் எரித்துவிடும்படி... 26. அதிக நாட்களுக்கு முன்னர் அல்ல நான் அங்கே உருக்கும் பெரிய கொப்பரையருகே நின்று கொண்டிருந்தேன். அந்த அக்கினி எவ்வளவு உஷ்ணமாய் இருக்கிறது என்பதை நான் கவனித்தேன், தொதித்து, கொதித்து, கொதித்துக் கொண்டே இருந்தது அது மிகவும் உஷ்ணமாக ஆக ஆக உலோகத்திலுள்ள, தங்கத்திலுள்ள கழிவு எல்லாம் மேல் மட்டத்திற்கு வருகிறது அதை அவர்கள் வழித்துப் போடுவார்கள், அவர்கள் உருக்கும் கொப்பரைத் தீயை சிறிது அதிகமாக்குவார்கள். பின்னர் அது அதிகமாக வேகும்போது முட்டாள் தங்கம் (pyrite) இன்னும் பல வித்தியாசமான வஸ்துகள் முதலியன அதிலிருந்து வெளிவரும். முதலாவதாக வெளியில் வருவது புழுதி போன்று அழுக்காக இருக்கும். அடுத்து வெளிவருவது சேறு, கனிமங்கள் போன்றதாகும். ஓ அது நல்லதல்லாத காரியம். ஈயம், முதலான காரியங்கள் வெளிவரும். அதை அவர்கள் வழித்தெடுப்பார்கள். இப்படியாக தொடர்ந்து செய்து கொண்டே போக கடைசியில் முட்டாள் தங்கத்தை (pyrite) அதிலிருந்து வழித்துப் போடுவார்கள். அது முட்டாள் தங்கம். 27. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கும்போது அல்லது அதைப் போன்று நடிக்கும்போது, எப்படி இருந்தாலும், ஜனங்கள் ஒருவரிலொருவர் ஏமாற்றக் கூடும் காரியங்கள் அனேகம் இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியை கொதிக்கச் செய்யும்படி அனுமதிப்பீர்களானால், பாருங்கள். அது எல்லாவற்றையும் மஞ்சள் இரும்பான முட்டாள் தங்கத்தையும் கூட உங்களிலிருந்து வெளியே எடுத்துப் போடும். மஞ்சள் இரும்பு; அனேகர் மேற்கே சென்று அதில் கொஞ்சம் கண்டடைவார்கள். அவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டுவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது தங்கத்தைக் காட்டிலும் அதிகமாக ஜொலிக்கும். ஆனால் அது முட்டாள் தங்கம்; அதற்கு எதும் மதிப்பு கிடையாது. அவர்கள் அதை கொதிக்க வைத்து அதை எல்லாம் வழித்துப் போட்டு; அதை கொதிக்க வைத்து, கொதிக்க வைத்து, அது சுத்த பொன்னாக ஆகும்படி அதை கொதிக்க வைப்பார்கள். பார்க்கப் போனால் நூறு சதவீதம் தங்கமாய் இருக்கும். அந்த விதமாகத்தான் தேவன் தம்முடைய சபையில் செய்கிறார். பரிசுத்த ஆவியை அதன் மேல் ஊற்றி எல்லா உலக காரியங்களையும், வித்தியாசங்களையும், சுயநலத்தையும் மற்றும் எல்லாக் காரியங்களையும் உள்ளே கொதிக்க வைத்து அவர் அதை வெளியே தள்ளுகிறார். அவரிடத்தில் வருகிற ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் அவர் கொதிக்க வைத்து அதை வெளியே தள்ளுகிறார். ஆமென். 28. அப்பொழுது அதை உன்னால் புசிக்க முடியும். அங்கே பதினோராம் வசனத்தில் இவ்வொரு அழகான கருத்து இருக்கிறது. அதைப் புசிக்க வேண்டிய விதமாவது (இதைக் கவனியுங்கள்). நீங்கள் உங்கள் அரைகளில் கச்சையை கட்டிக் கொண்டும் (எனக்கு அதைப் பிடிக்கும்) உங்கள் கால்களில் பாதரட்சையை தொடுத்துக் கொண்டும், உங்கள் கையில் தடியைப் பிடித்துக் கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக் கடவீர்கள். அது கர்த்தருடைய பஸ்கா. எனக்கு அது பிடிக்கும். நீங்கள் புசிக்கும்போது போவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அதுதான் காரியமே. 29. நாம் எபேசியருக்குத் திருப்புவோம். எபேசியர் ஆறாம் அதிகாரத்திற்கு திருப்பி இங்கே சபையானது ஆயத்தபடுவதைக் குறித்து பவுல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். எபேசியர் ஆறாம் அதிகாரம் 14 ஆம் வசனத்திலிருந்து தொடங்குவோம். சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்களாயும் நீதி என்னும் மார்க்கவசத்தை தரித்தவர்களாயும்.... சமாதானத்தின் சுவிசேஷத்துக்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடகத்தையும் பிடித்துக் கொண்டவர்களாயும் பொல்லாங்கனுடைய அக்கினி அஸ்திரங்களை அவித்துப் போடத் தக்கதாய்... நில்லுங்கள். இரட்சணியம் என்னும் தலைசீராவையும் தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். யுத்த களத்திற்கு அணிவகுப்பிற்குப் போகும் ஒரு மனிதனைப் பவுல் உடுத்துவிக்கிறதைப் பாருங்கள். தேவன் இஸ்ரவேலை விடுவிக்கையில் துவக்கத்தில், “அவர் இப்பொழுது நீங்கள் அணிவகுப்பிற்காக ஆயத்தமாகத்தான் வேண்டும். நீங்கள் இரத்தத்தின் கீழ் வரும்போது உங்கள் பாதரட்சையை தொடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அரையைக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கரத்தில் தடியைப் பிடித்தவர்களாக அழைப்பிற்காக ஆயத்தப்படுங்கள் என்று கூறினார். எனக்கு அது பிடிக்கும். ஒரு மனிதன் இப்பொழுது அவன் கிறிஸ்துவினிடத்தில் வரும்போது அவன் பிரசங்கிக்கும்படியாக அவனுடைய சுவிசேஷம் என்னும் பாதரட்சையை தொடுத்துக் கொண்டும்; இரட்சணியம் என்னும் தலைச் சீராவையும், நீதி என்னும் மார்கவசத்தையும் அணிந்து கொண்டும்; அரையைக் கட்டிக் கொள்கிறான். 30. வழக்கமாக பழங்கால போர் வீரர்கள் அவர்கள் யுத்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் போது அவர்கள் ஒரு பெரிய அரைக்கச்சையை வைத்திருப்பார்கள் அதற்கு ஒரு இறுக்கிப் பிடிக்கும் ஒரு பிடிக்கல் (buckle) இருக்கும். எதிரியின் ஈட்டிகளை தடுக்கும் அந்த கேடயங்களை அவர்களுடைய இடுப்பில் அது தாங்கிப் பிடிக்கும். அது எவ்வளவு உண்மையான பாடமாக நமக்கு உள்ளது. இடுப்பில் அவைகள் தளர்வு அடையும்போது, கீழே தொங்கும் போது (கேடயங்கள்) அவர்கள் அந்த கச்சையை இறுக்கிக் கொள்வார்கள். அவைகளை மீண்டுமாய் இறுக்கி மேலே கொண்டு வருவார்கள். இன்றைக்கு என்ன ஒரு பரிபூரண காட்சியாக அது உள்ளது. தளர்ச்சியாகும் என்று நீங்கள் நினைக்கும்போது, அல்லது அதில் ஒரு உபயோகமும் இல்லையென்று பிசாசு கூறும் போது கீழாகத் தொட்டு உங்களுடைய கச்சையை சற்று இறுக்கி அணைத்துக் கொள்ளுங்கள். பட்டயத்தை சற்று உறுதியாகக் கரத்தில் பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். எனக்கு அது பிடிக்கும். அணி வகுப்பிற்கு ஆயத்தமாக இருங்கள். அந்த இரவன்று அந்த இரத்தத்திற்குக் கீழாக வரும் ஒவ்வொரு மனிதனும் அங்கேயே தரித்திருந்து; அணிவகுக்க கட்டளைகள் வரும்வரை வெளியே போகாமல் இருக்க வேண்டும். 31. தேவனுடைய ஆவியினாலே பிறந்து கிறிஸ்துவுக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதனும் முடிவில்லாத ஜீவனுடையவனாக இருக்கிறான். அவனுடைய கேடயத்தையும் மார்க்கவசத்தையும் தரித்துக் கொண்டு ஆயத்தமாய் நின்று கொண்டு அங்கே அணிவகுப்பிற்குப் போக கட்டளைகள் வருமட்டாய் எங்கும் விலகுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறான். ஓ! இது அற்புதமாய் இல்லையா, அதையெல்லாம் தொடுத்துக் கொண்டவர்களாய் இருப்பதினால் போர் வீரர்களே நீங்கள் சந்தோஷமாய் இருக்கவில்லையா? 32. நம்முடைய கூடாரத்தில் பாட்டை வழி நடத்துபவர் பாடும் கருப் பொருள் பாடலானது: யுத்தம் நடக்கின்றது ஒ! கிறிஸ்தவ போர் வீரர்களே. கண்டிப்பான உடுத்துதலோடு முகத்துக்கு முகமாய் ஆயுதங்கள் ஜொலித்துக் கொண்டும் வண்ணங்கள் பிரகாசித்துக் கொண்டும் சரியானதும் தவறானதும் இன்றைக்கு சந்திக்கிறது. யுத்தம் நடக்கின்றது. ஆனால் தளர்ச்சி அடையாதிருங்கள்! பலமுள்ளவர்களாக கர்த்தருடைய வல்லமையைப் பற்றிக் கொள்ளுங்கள்! தேவன் நமக்காக இருப்பாரானால், அவருடைய கொடியை நம்மேல் ஏற்றுவார். கடைசியில் நாம் ஜெயம் எடுத்தவரின் பாடலை பாடுவோம்! அந்தப் பழைய பரிசுத்தவான்கள் அனேகர் கல்லறைக்கு போய்விட்டனர். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் அக்கரையிலே புதிய உலகத்திற்குள்ளாக வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்கள் வரும்போது; சிலுவையின் கொடி நம்மேல் பறக்கும்; ஜெயம் எடுத்தவரின் பாடலை நாம் பாடுவோம்! அந்த இரவில் கல்யாண விருந்தில் மேஜையைச் சுற்றி நாம் உட்காரும்போது அந்த மகத்தான மேஜை ஒருக்கால் நூறு ஆயிரம் மைல் தூரத்திற்கு நீண்டு இருக்கலாம்! இரத்தத்தினால் கழுவப்பட்ட பரிசுத்தவான்கள் அங்கே சுற்றிலுமாக இருப்பார்கள். அந்த மேஜையருகே போய் அவர்கள் ஒவ்வொருவரோடும் கரம் குலுக்கி (ஆமென்) சத்தமிட நான் விரும்புகிறேன். நான் சத்தமிடுவதை உங்களுக்கு கேட்க விருப்பமா? நான் அங்கே போகுமட்டாய் காத்திருங்கள். என்னை கவனியுங்கள். இதற்கு நான் இன்னும் போதுமான பெரியவனாய் இல்லை. ஆனால் கவனியுங்கள்: இப்பொழுது நாம் அணி வகுப்பில் இருக்கிறோம். ஆயத்தப்படுங்கள்! நாம் போகிறோம்! 33. நாம் நம்முடைய வழக்கமான பாடத்திற்கு போவதற்கு முன்னர் இங்கே ஒரு விசனமான காட்சி அது அங்கே 38ம் வசனத்தில் இருக்கிறது. கவனியுங்கள் புறஜாதியான ஜனங்கள் அனேகர் அங்கே அவர்களுடைய மந்தையோடு போனார்கள். இஸ்ரவேலர் ஒரு தவறைச் செய்தனர். இயற்கைக்கு மேம்பட்டது செய்யப்பட்டாயிற்று. இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் நடந்ததால் மனமாற்றமில்லாத ஜனங்கள் பின் தொடர்ந்தார்கள். முடிவிலே அது அவர்களை தொடர்ந்து போகாமல் தொல்லைக்கு உள்ளாக்கியது. இங்கே 42ம் வசனம் 43ம் வசனங்களில் கவனிக்கலாம். கர்த்தர் மோசேயை நோக்கி விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களேயன்றி வேறு ஒருவரும் அந்த பலியை புசிக்கக் கூடாது. அன்னியர்கள், புறம்பானவர்கள் ஒருவரும் புசிக்கக் கூடாது. விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் புசிக்கலாம் என்று கூறினார். அன்புக்குரிய நண்பர்களே இந்த நாளில் என்னே ஒரு அவமதிப்பு உடையவர்களாய் இருக்கிறோம். அதாவது சபையிலே சபையை சார்ந்துள்ள அனைவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளுகிறது அது தவறாக இருக்கிறது. மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே அதாவது பாத்திரராய் உள்ள அனைவரும் 34. ஏசாயா பேசி, “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிரம்பி இருக்கிறது. யாருக்கு நான் உபதேசத்தை உணர்த்துவேன். பால் மறக்கப்பட்டவருக்கு என்றான். கற்பனையின் மேல் கற்பனையும். பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும். நன்மையானது எதுவோ அதைப் பற்றிக் கொள்ளுங்கள்”, என்றான். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறதான நாளை அறிந்தவராக தேவன் பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது சபையானது அவ்வளவு அரசியலாக இருந்து எல்லா காரியங்களும் உள்ளே வர அனுமதிப்பார்கள். சபையின் புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் இருந்தால் போதும். அவர்கள் அங்கத்தினர்களாய் இருக்கின்றனர். அவர்கள் இராபோஜனத்தில் பங்கு பெறுகின்றனர். “எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தை புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுடையவனாய் இருக்கிறான்”, என்று வேதம் கூறுகிறது. பரிசுத்த யோவான் 13ஆம் அதிகாரத்தில் இயேசுவானவர் பேசுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு 2கொரிந்தியர் 16ம் அதிகாரத்தில் பவுல் இப்படி கூறுகிறான். எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தை புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுடையவனாய் இருப்பாள். அவன் பங்கு பெறுவதற்கு முன்னர் எந்த மனிதனும் தன்னை தானே சோதித்து அறிய வேண்டும் என்று கூறுகிறான். நான் வேத வார்த்தையைக் கூறுகிறேன். அது சரியே! என்னத்தினால் எனில் அபாத்திரமாய் போஜன பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால் தனக்கு ஆக்கினை தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம் உங்களில் அநேகர் பெலவீனனும் வியாதியுள்ளவர்களுமாக இருக்கிறார்கள். அநேகர் நித்திரை அடைந்தும் இருக்கிறார்கள். நீங்கள் தேவனோடு சரியானவர்களாய் நிற்கிறீர்கள் என்ற நிச்சயத்தையுடையவர்களாய் இருங்கள். இங்கே அது நிழலாட்டமாய் இருக்கிறது. அதாவது விருத்தசேதனம் பண்ணப்பட்டவனேயன்றி வேறு ஒருவனும் இல்லை. அவள் எவ்வளவுதான் நன்றி விசுவாசமுள்ளவனாய் இருந்தாலும் கூட, யூத சபைக்கு எவ்வளவு உதவியாய் இருந்தாலும்; அவன் இராபோஜனம் எடுப்பதற்கு முன்னே அல்லது பஸ்காவை புசிப்பதற்கு முன்னே அவன் புதியதாக வேறு மார்க்கத்திலிருந்து வந்தவனாக இருந்தாலும் ஒரு உண்மையான விருத்தசேதனம் பண்ணப்பட்ட விசுவாசியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நாம் எவ்வளவு தூரம் அந்த கோட்டை விட்டு விலகி இருக்கிறோம். 35. இப்பொழுது நாம் துரிதமாய் பார்ப்போம். இன்று இரவு தேவன் வெளியே கொண்டு வந்தார். இப்பொழுது 14ம் அதிகாரம் 13ம் வானத்திற்கு திருப்புகிற போது, அவர்களுக்கு முன் செல்லும்படியாக அக்கினி ஸ்தம்பத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இன்று இரவு அவர்கள் படத்தை இங்கே வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் இதை பயபக்தியுடன் கூறுகிறேன். என்னுடைய உத்தமமான தீர்மானத்தின்படியாக இன்று இரவு இந்த குழுவில் இங்கே நாம் இருந்து கொண்டிருக்கையில் அவர் இன்று இரவு நம்மோடு இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இஸ்ரவேல் பிள்ளைகளை வழிநடத்திக் கொண்டு போன அதே அக்கினி ஸ்தம்பம் நமக்கு முன்பாக போய்க் கொண்டு அதே அடையாளங்களையும், அற்புதங்களையும் நடப்பித்துக் கொண்டு இருக்கின்றது. இஸ்ரவேலை பின் தொடர்ந்து வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழி நடத்திக் கொண்டு போன தூதன் உடன்படிக்கையின் தூதனாகும். அது இயேசு கிறிஸ்துவே என்பதை இங்கேயுள்ள எந்த போதகனும் அல்லது வேதபாண்டித்தியரும் அறிந்து இருக்கிறார்கள். இன்றைக்கு பரிசுத்த உருளைகள் என்று அழைக்க விரும்புகின்ற இவர்களை நேற்றும், இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து இந்த குழுவுக்கு முன்பாக தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார். சரி தொடர்ந்து போய்க் கொண்டே ஜெயத்தின் மேல் ஜெயம் எடுத்தவராய் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம். 36. அந்த ஜாதிகளால் அந்த நாட்களில் அவர்கள் நிந்திக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும். ஜாதிகளால் தள்ளப்பட்டவர்களும். அழைக்கப்பட்டவர்களாயும் இருந்தார்கள். எல்லாவிதமாகவும் அழைக்கப்பட்ட வர்களாயும் இருந்தார்கள். உண்மையான விசுவாசியோடும் இன்றைக்கு அந்த விதமாய் இருக்கிறது நீங்கள் உங்களின் சபைகளில் உங்களுக்கே தெரியும். கிறிஸ்துவுக்காக ஒரு தீர்மானம் எடுத்தவர்களாய் இன்று சத்தியத்திற்காக பேசும் போது முழு சபையும் அவனைப் பார்! அவனுக்கு சிந்தை கெட்டுவிட்டது. அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறுகின்றனர். அதற்கு எந்த கவனமும் செலுத்தாதீர்கள். பின் தொடர்ந்து செல்லுங்கள். இப்பொழுது நீங்கள் சர்வாயுதவர்க்கம் தரித்திருக்கிறீர்கள். இரத்தம் உங்களுக்கு முன்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களை வழி நடத்துகிறார். தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள். யாராவது எது கூறினாலும் அதற்கு கவனம் செலுத்தாதிருங்கள். நேராக கல்வாரியை நோக்கிப் பார்த்து அணிவகுப்பில் செல்லுங்கள். அழகான மாதிரி! 37. இப்பொழுது அவர்கள் ஊடாக கடந்து... வெளியே வந்தார்கள். இப்பொழுது கவனியுங்கள் இரத்தத்தினால் மீட்பு எகிப்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வந்தது. இப்பொழுது அவர்களை ஒரு தேசத்திற்கு கொண்டு செல்ல வேறு ஏதாவது இருக்க வேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது அவர்கள் புறப்படத் துவங்குகிறார்கள். அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டு இரத்தத்தின் கீழாக அவர்கள் வெளியே வந்து அணிவகுத்துப் போகிறார்கள். இப்பொழுது அவர்கள் ஏதோ காரியம் வரைக்குமாய் போய் இருக்கிறார்கள். மரணத்தில் இருந்து நீங்கி ஜீவனிடம் வந்து இருக்கிறார்கள். அவர்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இங்கே வந்த பின்பு தொல்லைகள் எழும்பத் தொடங்கியது. பார்வோனின் சேனை அவர்களைப் பிடித்துக்கொண்டு போகும்படியாக தொடர்ந்து வருகிறது. தொந்தரவு உள்ளே வந்துவிட்டது. கவனியுங்கள், தேவன் நம்முடைய அடைக்கலமும் பெலனுமாய் இருக்கிறார். ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமாய் இருக்கிறார். ஓ! இதைக் காண்கிறீர்கள் என்று நம்புகிறேன். இதோ அது இருக்கின்றது. ஆனால் கவனியுங்கள், இப்பொழுது 13-ம் வசனம். இப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள் என்றாள். 38. நான் அதை விரும்புகிறேன். இயேசுவானவர் மரித்தோரில் இருந்து எழுந்த பின்னர் அவருடைய வார்த்தை அடிக்கடி பயப்படாதிருங்கள் என்பதாக இருந்தது. இன்றைக்கு சபைகளோடு இருக்கின்ற தொல்லை அதுதான். நீங்கள் தோல்வி அடையப் போகிறீர்கள் என்பதும் மரணத்துக்கேதுவான பயமும் இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும்போது உங்களால் எப்படி தோல்வியைக் காண முடியும்? உங்களால் தோற்கவே முடியாது. நீங்கள் முடிவில்லாத ஜீவனை உடையவர்களாய் இருக்கிறீர்கள், பாதாளத்தில் உள்ள எல்லா பிசாசுகளாலும் உன்னை அசைக்க முடியாது. நீ முடிவில்லாத ஜீவனை உடையவனாய் இருக்கிறாய் என்று இயேசு கூறி இருக்கிறார். எனவே தோல்வியைக் குறித்து பயப்படாதே. நான் மூடபக்தியுள்ளவனாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என கூறுகிறீர்கள். அமைதியாக உட்கார்ந்து ஒன்றும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும், கொஞ்சம் மூடபக்தியில் ஏதாவது செய்வதை நான் விரும்புவேன். நிச்சயமாக நான் விரும்புவேன். 39. ஏதோ காரியத்தை செய்ய போகின்ற மனிதனைப் பற்றிய கதைப் பாடல் பற்றி இங்கே கூறப்பட்டது. அவரிடத்தில் ஒரு வேலை வேண்டும் என்று ஒரு நபர் வந்தானாம். அவர் உன் பெயரை கையெழுத்திடு என்றார். கையெழுத்து போடுவதற்காக அவன் ஒரு பென்சிலை எடுத்தானாம். உடனே அவர் உன்னுடைய பென்சிலில் அழிக்கும் ரப்பர் எங்கே என்று கேட்டாராம். அதற்கு அவன் நான் தவறுகள் செய்வதே இல்லை என்று கூறினான். அவரோ உன்னை என்னால் உபயோகிக்க முடியாது. நீ ஒன்றையும் செய்யப் போவதில்லை என்றார். அது சரியே! நீ தப்பு, எதுவும் செய்யப் போவதில்லை என்றால் நீ ஒன்றையும் செய்யப் போவதில்லை; நாம் போகலாம் சகோதரனே, என்றார். எழுந்து போய்க் கொண்டிரு, அந்த ‘லாங்ஃபெலோ’வை(LONGFELLON) எனக்குப் பிடிக்கும். அங்கே எனக்கு எண்ணிக்கைகளை கணக்கிட்டு எனக்கு சொல்லாதிருங்கள். ஜீவியம் என்பது ஒரு வெறுமையான கனவு. உறங்குகின்ற ஆத்துமா மரித்ததாய் இருக்கின்றது. காரியங்கள் அவர்கள் காண்பது போல இல்லை. ஆம் ஜீவியம் உண்மையாய் இருக்கின்றது! ஜீவியம் மேன்மையாக இருக்கின்றது. கல்லறை என்பது அதின் இலக்கு அல்ல. மண்ணாய் இருக்கின்ற நீ மண்ணுக்குத் திரும்புவாய் என்பது. ஆத்துமாவைக் குறித்துப் பேசப்பட்டது அல்ல. நாம் எழும்பி எந்த போராட்டத்திற்கும் ஏற்ற இருதயத்தோடு கிரியை செய்வோமாக பேச முடியாத துரத்தப்பட்ட கால்நடை போல் இராதே! இன்னுமாய் ஒரு வீரனாய் இரு 40. ஜனங்கள் உங்களை வருந்தி கிறிஸ்துவினிடத்தில் நடத்தும் வரைக்கும் காத்திருக்காதே! ஒரு புருஷனைப் போன்று அல்லது சீமாட்டியைப் போன்று நின்று புருஷரை ஏற்றுக்கொண்டு வெற்றியுடன் முன் நடந்து செல்! ஆமென். கரடுமுரடான ஆயத்தமாக உள்ள போர் வீரர்கள் தான் தேவனுக்கு தேவையாய் இருக்கிறது. நீங்கள் ஒரு 105 பவுண்டு எடை உள்ளவர்களாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் அவருடைய வழியை உடையவராய் இருக்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் இன்னமும் திடகாத்திரமாயும், சகோதரனே வல்லமையால் நிறைந்தும் இருக்கலாம். இருநூறு பவுண்டு எடை இருந்தும் ஒரு துளி புருஷ லட்சணமில்லாத மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அது சரியே, சரி, கவனியுங்கள். மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள். சும்மா இருந்து நீங்கள் இன்றைக்கு கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் என்றான். அது நல்லது. தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள். எதை குறித்தும் பயப்படாதிருங்கள். நீங்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தால் தொடர்ந்து செல்லுங்கள். 41. சகோதரன் பிரான்ஹாம் எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும், என்பீர்களானால் தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள்.பயப்படாதிருங்கள், இப்பொழுது, “நான் சுகவீனனாய் இருக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம் தொடர்ந்து போக முடியவில்லை”, என கூறுகிறீர்களா? கவலைப்படாதீர்கள், தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள், நம்முடைய கர்த்தருடைய இரட்சிப்பைக் காண்பீர்கள், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள். “அது என்ன விதமாய் இருக்கப் போகிறது. வைத்தியர் கை விட்டுவிட்டார்; இப்பொழுது அந்த நபர் அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் மேலானதாக செய்தார். ஆனால் தேவன் அவருடைய மேலானதை இன்னும் செய்யவில்லை. அது சரி. ஒரு நிமிடம், இப்பொழுது அவருக்கு செவி கொடுங்கள், சரி. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள், இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை... (வாதிக்கிறவர்களை, தொல்லை கொடுக்கிறவர்களை) 42. சகோதரன் பிரான்ஹாம் என்னால் மட்டும் புகைக்கிறதை விட முடிந்தால்! குடிப் பழக்கத்தை விட முடிந்தால்! என்னால் திருடுவதை விட முடிந்தால்! நான் செய்யும் இதையும், அதையும், மற்றதையும் என்னால் மட்டும் விட முடிந்தால்”, என்கிறீர்களா? சோர்ந்து போகாதிருங்கள். தொடர்ந்து நடந்து செல்லுங்கள். தேவன் மீதியானவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். “என்னால் அதை செய்ய முடியும் என்று நான் அறிந்திருந்தால் சகோதரன் பிரான்ஹாம் நான் கிறிஸ்துவை இப்பொழுதே ஏற்றுக் கொள்வேன்”. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து செல்லுங்கள். மேலே மேலே போய்க் கொண்டேயிருங்கள். நீங்கள் கர்த்தருடைய இரட்சிப்பைக் காண்பீர்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். ஆமென். (கொஞ்சம் நேரத்தில் அது சரிப்படுத்தப்படப் போகப் போகிறது). கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றார். இப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு, என்றார். (எனக்கு அது பிடிக்கும்) 43. “நான் சபையில் 10 வருடங்களுக்கு முன்னதாக சேர்ந்துக் கொண்டேன், சகோதரன் பிரான்ஹாம்; நான் ஒரு உத்தமமான அங்கத்தினராய் இருந்து வந்தேன்”. என்று கூற முயற்சிக்காதிருங்கள். அது எல்லாம் அருமையாய் இருக்கிறது. நான் அதைப் பாராட்டுகிறேன். ஆனால் இன்று இரவு நாம் தொடர்ந்து போவோம்; தேவன் போய்க் கொண்டு இருக்கிறார். இன்றைக்கு ஜனங்கள் இங்கே திரும்பிப் போய்விடுகிறார்கள். அவர்கள் நல்லது, இப்பொழுது... என்கிறார்கள். விஞ்ஞானம் 150 வருடங்களுக்கு முன்னர் அங்கே பிரான்ஸில் ஒரு விஞ்ஞானி இருந்தார். அது “ஒரு மனிதன் பயங்கரமான வேகத்தில் மணிக்கு 30 மைல்கள் போகும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியை இழந்து மேலே எழும்புவான், அவன் போய் விட்டிருப்பான்”. என்று கூறுகிறது. ஹா! ஒரு மணிக்கு 30 மைல்கள். இப்பொழுதோ அவன் மணிக்கு 1600 மைல்கள் வேகத்தில் போகிறான். விஞ்ஞானத்தில் அந்த மனிதனைப் பற்றி திரும்பவும் குறிப்பிட்டதாக கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவன் நாட்களில் அவன் சொன்னது சரியே! ஆனால் அவர்கள் இன்னொரு நாளில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அது சரியே. ஆனால், பிரசங்கிமார்களாகிய நாம், ஓ இல்லை. இப்பொழுது பரிசுத்த மூடி, பென்னி, நாக்ஸ், கால்வின், அது போன்ற சிலர் அதைக் குறிந்து என்ன கூறி என்று நான் பார்க்கட்டும் தெய்வீக சுகமானது நாட்களில் அவர்கள் சரியாக இருந்தார்கள். தொடர்ந்து முன்னேறிப் போய்க் கொண்டேயிருக்கிறோம். நாம் வேறு சிலவற்றை உடையவர்களாய் இருக்கிறோம். 44. விதை விதைக்கிறவன் உவமையை இயேசு கூறினார். விதைக்கிறவன் விதைக்கச் சென்றபோது சத்துரு வந்து கோதுமையோடே களைகளையும் விதைத்துவிட்டுப் போனான். அவரோ, “அதை அப்படியே ஒன்று சேர்ந்து வளரவிடுங்கள்”, என்றார். உலகமானது எவ்வளவு பொல்லாததாகிக் கொண்டே போகிறது என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் சபையானது எவ்வளவு வல்லமையைப் பெற்று வருகிறது என்பதை நீங்கள் காணத் தவறிப் போகிறீர்கள். களத்தில் நின்று கொண்டிருக்கையில் அவள் உயரே எழும்பி கொண்டே இருக்கிறாள். அவளோ ஒரு சிறு மந்தையாய் இருக்கிறாள், ஆனால் சகோதரனே, தேவன் அவளோடு இருக்கிறார். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவள் தளபதிக்காக வெற்றியின் அலங்கார அணிவகுப்பு செய்யப் போகிறாள். ஆமென். தேவனுடைய சபை ஒரு போதும் தவறிப் போகாது. பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது. அவைகள் அதற்கு எதிராக இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால் அவைகளால் மேற்கொள்ள முடியாது. சபையானது தளபதிக்காக வெற்றியின் அலங்கார அணிவகுப்பு செய்யப் போகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் வெற்றி அணிவகுப்பு செய்யப் போகிறது. இந்த ஒரு காரியத்தைக் குறித்து சாதகமான உணர்வில் இருக்கிறேன். அதாவது கறை, திரையற்ற சபையை தேவன் உடையவராய் இருப்பார். ஆமென். அதற்காக நான் மகிவும் மகிழ்ச்சியடைகிறேன். 45. இப்பொழுது, “நான் அந்த சபைக்குள்ளாக இருந்தால்”, ஆமென். “சகோதரன் பிரான்ஹாம் அதற்குள்ளாக நீர் எப்படிச் சென்றீர்? கடிதம் (கொடுப்பதின்) மூலமாகவா? இல்லை”, எப்படி அதற்குள்ளாகச் சென்றீர்? பிறப்பின் மூலமாக; அதற்குள் பிறந்தேன். நான் பிரான்ஹாம் குடும்பத்தில் இருக்கிறேன். வரும். ஏப்ரல் மாதம் 6ம் தேதியில் 45 வருடங்கள் ஆகும். அவர்களுடைய குடும்பத்தில் சேர்ந்து கொள்ளும்படி என்னை அவர்கள் கேட்டதே இல்லை. நான் ஒரு பிரான்ஹாமாய் பிறந்தேன். நான் எப்பொழுதுமே பிரான்ஹாமாய் இருப்பேன். இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நான் ஒரு கிறிஸ்தவனாகப் பிறந்தேன். நாள் ஒரு கிறிஸ்தவனாக இருப்பேன். ஏனென்றால் தெரிந்து கொள்ளுதலின் மூலமாக தேவன் அதை அவ்வண்ணமாக நியமித்திருக்கிறார். அவருடைய சொந்த அன்பான குமாரனுடைய கிருபைகள் மூலமாக அவர் நம்மை அழைத்திருக்கிறார். நாம் அவரை ஏற்றுக் கொண்டு தித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டோம். ஒரு கை குலுக்கலினாலா?, ஒரு அங்கத்தினராதலினாலா?. ஒரு கடிதத்தினாலா?, எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். அங்கே அவருடைய இராஜ்ஜியத்தின் உடன் குடிமக்களாக ஆனோம். 46. நான் ஜெபித்துக் கொண்டு இருக்கையில் இந்த நாளுக்காக நாம் எப்படி கணக்கு கொடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி நான் இன்று நினைத்துக் கொண்டிருக்கையில்: எனக்கு முன்பாக இருந்த தலைமுறைக்காகவும் அல்லது எனக்கு பின்னர் இருக்கப் போகின்ற தலைமுறைக்காகவும் நான் கணக்கு கொடுக்கப் போவதில்லை. ஆனால் நியாயத்தீர்ப்பில் நான் இந்த தலைமுறையோடு நிற்க வேண்டியவனாய் இருக்கிறேன். “நாள் அங்கே நோக்கி பாருங்கள்: அந்த விளம்பரத்தில் பீர் குடித்து கொண்டு இருக்கும் ஒரு ஸ்திரீயின் படம் அதைப் போன்று ஏதோ ஒன்றை; அவள் மூச்சற்றவளாக அல்லது ஏதோ காரியம் அவளுக்கு இருக்கிறது”, என்றேன். நான் ஆம் ஜீவன் கூட இல்லாதிருந்தது. என்றேன். சரி அதுதான் காரியம். “நான் என்ன ஒரு அவமானம்”, என்றேன். நான் பிரசங்கித்தவைகள் எல்லாம் எந்த நன்மையும் செய்யாதது போன்று சில சமயங்களில் தோன்றுகிறது; ஆனால் அதை குறித்து ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்படாமல், எப்படி இருந்தாலும் நான் எச்சரிப்பின் சத்தமாக இருந்தாக வேண்டியதாய் இருக்கிறது. நான் எப்படியாய் இருந்தாலும் சுவிசேஷத்தை பிரசங்கித்து உயிர்த்தெழுதலைக் குறித்தும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும் சாட்சி கொடுத்தாக வேண்டியவனாய் இருக்கிறேன் என்று என் மனைவியிடம் கூறினேன். அவர்கள் அதை நிராகரித்து அவர்கள் முதுகைக் காட்டட்டும், தேவன் அவர்களை நியாயத்தீர்ப்பின் போது அதற்காக நியாயம் தீர்ப்பார் நான் பிரசங்கிப்பதற்கு மட்டுமே உத்தரவாதமுள்ளவன். பிரசங்கிக்கின்ற மற்ற போதகர்களும் கூட சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு உத்தரவாதம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 47. இப்பொழுது நான் அதை விரும்புகிறேன். கவனியுங்கள். இப்பொழுது, முன்னுக்குப் புறப்பட்டுப் போங்கள். தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள். ஆனால், இப்பொழுது) 16ம் வசனத்தில் கவனியுங்கள். நாம் இதை வாசிப்போம். “நீ உன் கோலை... ஓங்கி”... கோல், அது நியாயத்தீர்ப்பின் கோல். இப்பொழுது அது மோசேயின் கோல் அல்ல; அது தேவனுடைய கோலாய் இருந்தது. நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால் மோசே அந்த கோலை எடுத்து இந்த விதமாக உயர்த்திப் பிடித்தான். வண்டுகள் வந்தது. அவள் அதை தண்ணீர்களுக்கு மேலாக பிடித்தான். தண்ணீர் இரத்தமாக மாறிற்று. அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாய் இருந்தது. அந்த அதே கோல்... புரிகின்றதா! அந்த அதே கோலைக் கொண்டு அந்த கன்மலையை அடித்தான் கன்மலையில் ஒரு பக்கத்தில் ஒரு பிளவு உண்டாயிற்று. கன்மலையில் இருந்து தண்ணீர் புறப்பட்டு வெளிவந்தது. இப்பொழுது அந்த கன்மலை கிறிஸ்துவே. அது தேவனுடைய நியாயத்தீர்ப்பாய் இருக்கிறது. நீங்கள் அதை புசிக்கும் நாளில் தானே சாவீர்கள். கல்வாரியில் கிறிஸ்துவை அடித்து அந்த கசப்பான வேதனை நிறைந்த அந்த மரணத்தை செலுத்தினார். எந்த மனிதனும் அதை என்ன என்று விவரிக்க முடியவில்லை; அல்லது இனியும் விவரிக்க முடியாது. அங்கே தேவன் எல்லா தெய்வீக நியாயத்தீர்ப்பையும் அவர் மேல் சுமத்தி அவரை விலாவில் அடித்தார். அப்பொழுது அவர் விலாவிலிருந்து தண்ணீரும் இரத்தமும் ஆவியும் நம்முடைய மீட்புக்காகப் புறப்பட்டு வந்தது. 48. ஜனங்கள் அப்படியாக அவர் படத்தை வரைகிறார்கள். சில சமயத்தில் சிலுவையின் மேல் அவரைச் சுற்றி ஒரு அங்கியை வைத்து; அல்லது வேறு எதையோ வைத்து; வரைகிறார்கள். அது அந்த விதமாய் இல்லை. அவர்கள் அந்த மனிதனை எல்லா ஆபாசத்தையும் அவர்களால் முடிந்த அசுசியான காரியத்தையும் யாவரும் காணும்படி செய்தார்கள். ஆனால் அவர் அந்த வண்ணமாய் இருக்க வேண்டியதாயிற்று. உலகத்தில் இதுவரை இருந்த அல்லது இருக்கப் போகும் எல்லாரிலும் உயர்வானவரும். தாழ்ந்தவருமாய் இருந்தார். பின் வெளியரங்கமாய் நிர்வாணமாய் சிலுவையின் மேல் இருந்தார். காயப்பட்டு, அடிக்கப்பட்டு, இரத்தம் கசிந்து கொண்டு, வாய் நிறைய பரிகாசமும் எச்சில் முகத்தில் வழிந்து கொண்டும், அவருடைய சிரசில் முட்களால் ஆன பரிகாசத்தின் கிரீடம் சூட்டப்பட்டவராய் இருந்தார். ஆனால் அங்கேதான் மரணத்தையும் நரகத்தையும் பாவத்தையும் வியாதியையும் பாதாளத்தையும் ஜெயித்து, நம் எல்லாருக்கும் கிரயத்தை செலுத்தினார். அங்கே அவர் மரணத்தின் கூரைப் பிடுங்கி எடுத்தார் என்று அடிக்கடி கூறப்படுகிறது. அதனால் தான் பவுல் ஓ! மரணமே உன் கூர் எங்கே என்று கூறினான். அனேக பூச்சிகள், தேனீக்கள், சிலவகைள் அவைகளுக்குக் கொடுக்கின் கூர் இருக்கிறது என்றும் அவைகள் அதனோடு விஷத்தைக் கொண்டுள்ளன என்றும் எனக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முறை அவைகள் கொட்டும் போது அந்த கொடுக்கின் கூரை அவைகள் இழந்துவிடுகின்றன. மரணம் ஒரு சமயத்தில் அதற்குள்ளாக ஒரு கொடுக்கை உடையதாய் இருந்தது. ஆனால் கிறிஸ்து கல்வாரியில் அந்தக் கூரை மரணத்தில் இருந்து வெளியே எடுத்துவிட்டார். அல்லேலூயா,ஓ! அதை நினைத்துப் பார்க்கும்போது! எனக்காகவும் உங்களுக்காகவும் மரணத்தில் இருந்த அந்த கூர் எல்லாவற்றையும் வெளியே பிடுங்கினார். 49. அவர்கள் ரோமர்களின் சிறைச்சாலையில் பவுலின் தலையை வெட்டப் போகின்றபோது, “மரணமே உன் கூர் எங்கே?” என்று கூறினான். திருப்பி கல்வாரியை சுட்டிக் காட்டி அங்கே தான் மரணத்தில் இருந்து கூர் வெளியே எடுக்கப்பட்டது என்று கூறினான். “பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”, என்று கூறினான். ஆமென். சரியே! நீ உன் கோலை (நியாயத்தீர்ப்பை) ஒங்கி உன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்து விடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையில் நடந்து போவார்கள். எகிப்தியர் உங்களை பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தை கடினப்படுத்தி: பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாய் எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார். அப்பொழுது தேவ தாதனானவர்... கவனியுங்கள்! இப்பொழுது கவசத்தை இறுக்கிக் ஈட்டுங்கள். இஸ்ரவேல் பாளையத்திற்கு முன்னாக நடத்த தேவ தூதனானவர்... அவர் இன்னமும் இங்கே இருக்கிறார். இஸ்ரவேல் பாளையத்திற்கு முன்னாக நடத்த தேவனின் தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னாக நடந்தார். அவர்களுக்கு முன்னாக நின்ற மேக ஸ்தம்பம் பின்னாக நின்றது. (அல்லது இங்கே இருந்து மேலே சென்று தொல்லைகள் உண்டாகும் நேரத்தில் அவர்களுக்கும் தொல்லைகளுக்கும் இடையே செல்கின்றதாய் இருக்கிறது). 50. தொல்லைகள் தொடர்ந்து உங்களைச் சந்திக்கும் போது, எல்லா பக்கத்திலும் வியாதிகள், பிரச்சனைகள் உங்களை சந்திக்கத் தொடங்கும் போது தேவனுடைய தூதனானவர் உங்களுக்கும் வியாதிக்கும் இடையே நிற்கிறார். வழியிலே அங்கே நின்று தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு சவால் விடுகிறார். இஸ்ரவேல் தேசத்திற்கு உள்ளாகப் போவார்கள் என்ற வாக்குத்தத்தத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்து இருந்தார். ஒரு வேளை 10 லட்சம் புருஷர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து அவர்களை அழிக்கும் படியாக; ஒரு கூட்ட மிருகங்களைப் போன்று வெட்டிப் போடும் படியாக வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கர்த்தருடைய தூதனானவர் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு கொண்டு போகும்படியாய் அங்கே இருந்தார். அவர் பாளையத்தில் இருந்து எழும்பிப் போய் அவர்களுக்கும் ஆபத்துக்கும் இடையே நின்றார். அல்லேலூயா! அவர் இன்னமும் அதைச் செய்கிறார். அவர் வழியை உண்டு பண்ணுவார். ஓ, அதற்காக நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? இப்பொழுது இங்கே உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு வியாதியான நபருக்கும் அவர் வழியை உண்டு பண்ணுவார். அவர் ஏற்கனவே வழியை உண்டாக்கிவிட்டார். அவர் உனக்கும் தொல்லைக்கும் இடையே நின்று கொண்டு இருக்கிறார். 51. அவர் சரியாக இங்கே இப்பொழுது இருக்கிறார். என்று நான் அறிவேன். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் என்னை மத வெறியன் என்று அழையுங்கள். ஆனால் நீங்கள் கூறுவதற்கு நான் பொறுப்பாளி அல்ல. ஆனால் நான் கூறுவதற்கு தேவனுக்கு முன்பாக நாள் பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இஸ்ரவேல் பிள்ளைகளை வழி நடத்தினவர்; நான் சரியான விதமாய் நிதானிப்பேனானால்; நீங்கள் இன்று இரவு காண்கின்ற அந்த ஒளி அல்லது அந்த படத்தில் காண்கிற அவர் (அவர்கள் இன்று இரவு அதை அங்கே வைத்திருக்க வேண்டும்). அந்த நாளில் இயேசுவானவர் செய்ததையே சரியாகச் செய்யும்படியாக அந்த அதே தேவனுடைய தூதனானவர் இப்பொழுது சரியாக இந்தக் கட்டிடத்தில் இருக்கிறார். அதை உறுதிப்படுத்த அவர் இங்கே இருக்கிறார். அவர் அங்கே என்ன செய்தாரோ அதை அவர் இப்பொழுது செய்ய அவர் எப்பொழுதும் மாறாதவராக இருக்கிறார். தேவனுடைய தூதனானவர் நமக்கும் வியாதிக்கும்; நமக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கும்படியாக கடத்து போகிறார். “ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்பட்டேன்: தேவரீர் என்னோடு இருக்கிறீர்” என்று தாவீது கூறினதில் வியப்பொன்றுமில்லை. நிச்சயமாக. 52. இஸ்ரவேல் பாளையத்திற்கு முன்பாக சென்ற தேவ தாதனானவர் அங்கேயிருந்து விலகி அவர்களுக்கும் சத்துருவுக்கும் இடையே நின்றார். தேவனுடைய தூதனானவர் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் அந்த நபருடைய எதிரிக்கும் இடையில் இன்றிரவில் இங்கே நின்று கொண்டிருக்கிறார். நான் என்ன பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று நான் அறிவேன். இப்பொழுது இங்கே மேடையின் மேல் நின்று கொண்டிருக்கையில் இன்று இரவு சரியாக இந்தச் சிறிய குழுவிற்கு முன்பாக தேவன் தன்னை தாழ்மையாக்கிக் கொண்டு மகிமையில் இருந்து கீழே இறங்கி வந்து இப்பொழுது இந்த கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலை உடையவர்களானால் தேவன் உங்களுக்கு முன் செல்லமாட்டாரா? கவனியுங்கள். பாளையத்திற்கும் எகிப்திற்கும் இடையே அது வந்தது. உங்களுக்கும் உங்கள் வியாதிக்கும் இடையே அவர் வருகிறார். உங்களுக்கும் உங்கள் பாவத்திற்கும் இடையே சரியாக இப்பொழுது அவர் நின்று கொண்டு இருக்கிறார். ஏன்? நாம் சபையின் யாத்திரையில் இருக்கிறோம். எகிப்து எப்பொழுதும் உலகம் என்று அழைக்கப்பட்டது. இஸ்ரவேல் அதை விட்டு வெளியே வந்தபோது.. நினைவு இருக்கட்டும். அவர்கள் அங்கே சபை அங்கத்தினர்களாக இருந்தனர், ஆனால் இரத்தம் பாவபரிகாரம் செலுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தேவனால் விருத்தசேதம் பண்ணப்பட்டவர்களாக மாறினர். இன்றைக்கு விருத்தசேதனம் என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக இருக்கிறது. “எல்லோரும்”. என்றான் இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களாகிய நீங்கள் எல்லோரும் உங்கள் பிதாக்களைப் போல் பரிசுத்த ஆவிக்கு ஏன் எதிர்த்து நிற்கிறீர்கள் என்று ஸ்தேவான் கூறினான். பரிசுத்த ஆவி இருதயத்திற்குள் விருத்தசேதனம் பண்ணுகிறது. உலகத்தில் உள்ள எல்லா காரியங்களையும், வெட்டி எறிகிறது. அது பழைய பாணியிலான பரிசுத்த சபையாக ஆக்கி அவ்விதமே செயல்படுகிறது, அவ்விதமே ஜீவித்தனர். ஆனால் இன்றைக்கு மீதமுள்ள உலகத்தாரைப் போன்றே இருக்கிறது. அது ஒரு அவமானமாக இருக்கிறது. நாம் தடைகளை நீக்கிவிட்டோம். 53. வயதான ஒ,அவர் என்னுடைய பழைய மெத்தோடிஸ்டு பிரசங்கி நண்பர்; வழக்கமாக ஒரு பாடலைப் பாடுவார் என்று சகோதரன் ஸ்பர்ஜன் கூறுவதுண்டு, ‘நாம் தடைகளை நீக்கிவிட்டோம். நாம் தடைகளை நீக்கிவிட்டோம், நாம் பாவத்தோடு சமரசம் செய்து கொண்டோம். நாம் தடைகளை நீக்கிவிட்டோம், செம்மறி ஆடுகள் வெளியே போய்விட்டன. வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன?” ஏனென்றால் நீங்கள் தடையை நீக்கிவிட்டீர்கள். அதுதான் காரியம். கிறிஸ்துவ ஜீவியத்தின் தரத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால் வேத பாடசாலைகள் அடைகாத்து சில பிரசங்கிமார்களை பொரித்து சத்தியத்தோடு சமரசம் செய்து கொள்ள அனுப்பி வைத்தன. ஆனால் பாவத்தை கண்டனம் செய்ய பரிசுத்த ஆவி எப்பொழுதும் அங்கே இருந்தது; விசுவாசிக்கும் உலகத்து காரியங்களுக்கும் இன்று இரவும் இடையே நின்று கொண்டிருக்கிறார். ஆமென். இது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேல் சேனையும் இரா முழுவதும் ஒன்றொடொன்று சேராதபடி அவைகள் நடுவே வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு அது இரவை வெளிச்சமாக்கியது. ஆகவே ஒருவர் மற்றவர்களிடம் நெருங்கி வராதபடி எல்லா... இரவிலும் இருந்தது. கவனியுங்கள், இந்த விசுவாசிகள் குழுவிற்கு வெளிச்சத்தைத் தந்த காரியம் அவர்களைக் குருடாக்கிக் கொண்டிருந்தது. 54. சரியே! உங்களுடைய அதிர்வைத் தாங்கும் மேல் சட்டையைப் (SHOCK ROOF) போட்டுக் கொள்ளுங்கள். இதோ அது வருகிறது. கவனியுங்கள். வெளிச்சத்தை புறக்கணிக்கும் எந்த ஒரு மனிதனும் குருடாகி இருளில் நடக்கிறான், ஏனென்றால் நீங்கள் வெளிச்சத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. ஆமென். சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற ஊழியர்களை தேவன் அனுப்பியிருக்கிறார். அது சத்தியமாய் இருக்கிறது என்பதை ரூபகாரப்படுத்த அவர் மனிதர்கள் மத்தியில் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்புகிறார். மனிதர் அதை புறக்கணிக்கி புறக்கணிக்கிறனர். உங்களுக்கு அங்கே இருளைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. வெளிச்சமானது பிரகாசித்து கொண்டு இருக்கையில் சகோதரனே வெளிச்சத்தில் நடவுங்கள். வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவே வெளிச்சமாய் இருக்கிறார். உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரும்படியாக அவர் வந்தார். வெளிச்சத்தை புறக்கணித்தவர்கள் இருளைப் பெற்றுக் கொண்டார்கள். வெளிச்சத்தை புறக்கணித்த ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும் இன்று இருளில் நடக்கிறார்கள். எங்கே போகிறோம் என அறியாது இருக்கிறார்கள். அவன் மிகுதியாக தள்ளாடிக் கொண்டு இருக்கிறான். மக்களால் பிரசித்திப் பெற்றவனாக இருக்கிறான். ஆனால் எப்படி இவன் தேவனுடைய சமூகத்தில் நிற்பான் என்று வியக்கிறேன். 55. அதை கவனியுங்கள் இங்கே என்னே அற்புதமான காரியம். அவர் ஒருவருக்கு வெளிச்சமாயும் இன்னொருவருக்கு இருளாயும் இருக்கிறார். மோசே ஜெபித்த பிறகு இஸ்ரவேலர் சமாதானத்தோடு படுத்துக் கொண்டார்கள். இப்பொழுது கவனியுங்கள். மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இரவு முழுவதும் பலத்த கீழ் காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்ததால் அதை வறண்டு போகும்படி பண்ணினான்: ஜலம் இரண்டாகப் பிளந்து பிரிந்து போயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந் தரையிலே நடந்து போனார்கள்... நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால் இருளில் இருந்து வெளியே வந்து வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டவர்களாய் இஸ்ரவேல் பிள்ளைகள் வெளியே வந்தார்கள்; அவர்களுக்குத் தொல்லை உண்டான போது வெளிச்சமானது அப்படியே சுற்றிக் கொண்டு பின்னாக வந்தது. அவர்கள் இரவு முழுவதும் தூங்கினார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டு இருக்கையில் தேவன் ஒரு காற்றை அனுப்பி அதை கடலில் ஊடாக வீசச் செய்து தப்பிப்பதற்கான வழியைத் திறந்து கொண்டு இருந்தார். 56. ஆட்டுக் குட்டியானவருக்கு அல்லேலூயா, இன்று இரவு தான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருக்கிறபடியால் நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். நாம் தூங்கிக் கொண்டும், களிகூர்ந்து கொண்டும் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் இளைப்பாறிக் கொண்டும் இருக்கிறோம். அவர்களுக்கு தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டாக்க தேவன் வாக்களித்து இருக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தின் பெயரில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் தேவன் அங்கே கீழே இருந்து அவர்களுக்கு முன்பாக ஒரு வழியைத் திறந்துக் கொண்டு இருந்தார். அந்த அடிப்படையில் இன்று இரவு இயேசு கிறிஸ்துவை பரிசுத்தாவியானவரை ஏற்றுக் கொண்ட எல்லா புருஷர்களும் ஸ்திரீயும் நீங்கள் தூக்கத்தில் இருக்கையில் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் இளைப்பாறிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒருக்கால் நீங்கள் முடமாக இருக்கலாம், ஒருக்கால் நீங்கள் ஒரு குருடனாய் இருக்கலாம்; ஒருக்கால் நீங்கள் பார்க்க முடியாதவராக இருக்கலாம். ஒருக்கால் நீங்கள் செவிடாய் இருக்கலாம்; ஒருக்கால் நீங்கள் வியாதியாய் இருக்கலாம். இருதய கோளாறு அல்லது புற்றுநோய் ஏதாவது காரியத்தில் மரித்துக் கொண்டிருக்கலாம். இன்று இரவு வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அதன் பெயரில் இளைப்பாறுங்கள். பெந்தெகொஸ்தே நாள் அன்று முழக்கம் போன்ற பெருங்காற்றடித்தது போல அங்கே கீழாக வந்து உங்களுக்கு ஒரு வழியைத் திறக்கும். அல்லேலூயா! அதாவது அந்த வியாதி என்கிற பள்ளத்தாக்கின் ஊடாகக் கடந்து போனாலும் மீண்டும் ஆரோக்கிய தேசத்திற்கு திரும்பி வருவீர்கள். குளிர்ந்து போன, சம்பிரதாயமாக வாழ்ந்து கொண்டு, அடிமைத்தன விலங்கில் அகப்பட்டு, ஒவ்வொரு கருத்துகள் கொண்ட மார்க்கங்களின் தேசத்தின் ஊடாக கடந்து; பரிசுத்தாவியால் நிறைந்த, சந்தோஷ மான, களிகூறுதலுடன் சந்தோஷத்தால் நிறைந்த இருதயம் உடையவர்களாக கடந்து செல்வீர்கள். 57. தேவன் அவருடைய வல்லமையைக் காண்பிக்கிறார். அதை காண்பித்துக் கொண்டு இருக்கிறார். என்னை மன்னிக்கவும். நான் அதிகமாக சத்தமிடுகிறேன். வல்லமையில் மீட்பைக் காட்டுகிறார். ஒரு காரியத்தின் மேல் அங்கே பின்னாக இரத்தத்தைக் காண்பித்தார். அவர் இங்கே அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டவனின் மூலமாக அவருடைய வல்லமையைக் காண்பிக்கிறார். இரத்தத்தின் மூலமாய் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவருடைய வல்லமையைக் காண்பித்தார். வல்லமை மூலம் தப்பிக் கொள்ளும் வழியை உண்டு பண்ண அவருடைய மீட்பின் வல்லமையை அவர் காண்பித்தார். ஆமென். இன்று ஏற்றுக் கொண்ட நீங்கள் உங்களை பாவத்திலிருந்து கழுவி சுத்திகரித்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்ட உங்களை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு வழி நடத்த பரிசுத்த ஆவியின் வல்லமை இங்கே இருக்கிறது. வியாதியில் இருந்து ஆரோக்கியத்திற்கு மாற்றுகிற தேவன் இங்கே இருக்கிறார். தேவன் அவருடைய சபையின் யாத்திரையில் அசைவாடிக் கொண்டு இருக்கிறார்! அவள் பூக்கும் பருவத்திற்கு வருகிறாள். கொஞ்சம் கழித்து அங்கே தேவன் அவருடைய தானியத்தை ஒன்று சேர்ப்பார். இருளுக்குள் இருந்து ஆச்சரியமான ஒளிக்கு வருவது அற்புதமாய் இருக்கிறது. நாம் எவ்வளவாக அதை நேசிக்கிறோம். நான் எப்படியாக நேசிக்கிறேன் .அது இன்று இரவில் என்னுடைய ஆத்துமாவுக்கு எவ்வளவு அர்த்தம் உள்ளதாக இருக்கிறது. 58. நண்பர்களே நான் இன்று வெளியே இருந்தபோது என்னைச் சத்திந்த ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “பில்லி நீ சிறியவனாய் இருந்தது முதல் நான் அதிகமாய் மாறிவிட்டேன்”, என்று நான் ஜனங்கள் இடத்தில் கூற முயற்சித்தேன். “வழக்கமாக வியாபார களத்தில் அந்த பக்கமாக வந்து எனக்கு கூறுவது உண்டு. அதாவது நான் தேவனோடு சரியாக வேண்டும் நாள் தேவனோடு சரியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவது உண்டு. நான் ஒருவிதமாய்ப் பார்த்து சிரிப்பேன். பில்லி காரியங்கள் மாறிவிட்டது. நீ என்ன பேசினாய் என்பதை இப்பொழுது நான் அறிவேன்”. என்றார். நான் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று நினைத்தேன். அவர், “அதைக் குறித்து மற்றவர்களிடம் கூற முயற்சிக்கும்போது அவர்கள் உடனே பேச்சை வேறுவிதமாக மாற்றி, அந்த விநோதமான பத்திரிக்கை அல்லது காரியத்தைக் குறித்துப் பேசுவார்கள். ஓ, அது நான் அல்ல. இந்த அடுத்த நபர் இந்த மூலையில் இருக்கிறவன்; எனலாம். அவன் ஒருக்கால் மரிக்கலாம். அவன் தான் அடுத்த ஒருவனாக இருக்கலாம். அவனுடைய எண் அடுத்த ஒன்றாக இருக்கலாம். அடுத்த எண் யாருடையது என்று தெரியாதே!”, ஒருக்கால் இன்று இரவு அது உன்னுடையதாய் இருக்கலாம். நண்பர்களே தேவன் உன்னை அழைக்கும் நேரம் இதுவாக இருக்கலாம். 59. தேவன், பரிசுத்த ஆவியானவர், இன்று இரவு இங்கே மரணத்தற்கும் ஜீவனுக்கும் இடையே நின்று கொண்டு இருக்கிறார். வியாதிக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே இன்று இரவு நின்று கொண்டிருக்கிறார். நான் என்ன பேசுகிறேன். என்பதை அறிந்திருக்கிறேன். சரியே! சரி, நீங்கள் இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கும் அதே பரிசுத்த ஆவி மறுபடியுமாய் பிறந்த ஒவ்வொரு நபரும் அந்த ஆவி இந்த அறையில் இருக்கிறார் என்பதை உணரக் கடமைப்பட்டுள்ளீர்கள். உங்களால் அதை தவிர்க்க முடியாது. உங்களுக்குள் ஏதாவது ஜீவன் இருக்குமானால் அது அங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். சரியே. 60. ஒரு காந்தத்தை போன்று... ஒரு மகத்தான காந்தம் ஒரு பொருளின் அருகே வரும்போது அது அசையவும் நெளியவும் தொடங்குகின்றது. ஏன்? அது நெருங்கி... வருகிறது. இந்தியானாவில் உள்ள ஹெம்மோன்டுவில் (HAMMONI) ஒரு சமயம் இங்கே உயர ஒரு பெரிய காந்தம் போன்ற ஒன்று கீழே வந்து தரையில் கிடந்த சீவல்களை அவர்கள் எடுத்ததை நான் கவனித்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் ஒரு மிகப் பெரிய நெம்புகோலை இழுத்தார்கள். உடனே ஒரு பெரிய காந்தம் கீழே வந்தது. அவர்கள் எல்லா இரும்பு சீவல்களையும் (SHAVINGS) பெருக்கி தரையில் நடுவில் வைத்திருந்தார்கள். அந்த காந்தமானது அந்த வழியே கடந்து போன போது அந்த எல்லா இரும்பு சீவல்களும், காந்தத்தால் தூண்டப்பட்டு அதன் அண்டையில் காந்தத்துடன் போய்விட்டன. அவர்கள் காந்த சக்தியை நீக்கினவுடன் அவைகள் எல்லாம் அந்த கொதிக்கும் கொப்பரையில் உள்ளே விழுந்து மீண்டுமாய் வார்ப்பிக்கப்பட்டது. அதிகமான அலுமினிய சீவல்கள் அங்கேயே விடப்பட்டன. நான் இவைகள் ஏன் போகவில்லை. என்றேன். அதற்கு அவர் அவைகள் காந்தத்திற்கு ஈர்க்கப்பட காந்த ஈர்ப்பு பொருள் இல்லை. நான் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றேன். இங்கே கீழே இருக்கிறதே இந்த இரும்புத் துண்டுகள் ஏன் போகவில்லை என்றேன். அதற்கு அவர் நீ கவனித்துப் பார்த்தால் அது கீழேயுள்ள இரும்பு ஆணியால் பொருத்தப்பட்டுள்ளது என்றார். நண்பர்களே, இது இன்றைக்குள்ள அநேக ஜனங்களைப் போன்று இருக்கிறது. நீங்கள் ஒரு சபை அங்கத்தினராக ஆனீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் காந்தமாக்கப்படவில்லை. பின்னர் ஏதோ காரியம் உங்களை கீழே இரும்பு வளையத்துக்கு அடிமையாக வைத்துவிட்டது. சிலவேறுபாடுகள் கம்பி வளையத்திற்குள் உங்களை இங்கே சிக்கவைத்துள்ளது. 61. ஆனால் இன்றைய நாள் ஒன்றில் அங்கே கிழக்கில் இருந்து தேவகுமாரன் என அழைக்கப்படுகிற மகத்தான காந்தம் வருகின்றது. அது இந்த தேசத்தை வாரிக் கொள்ளும். கிறிஸ்துவிற்குள்ளாக மரித்த ஒவ்வொருவரும் அக்கரைக்குப் போவதற்காக அவரோடு கூட எழும்புவார்கள். இந்த பழைய சரீரங்கள் மறுரூபமாக்கப்பட்டு அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போன்று அவருடைய சாயலாக ஆக்கப்படும். என்றென்றும் ஜீவிப்பதற்காக வியாதியிலிருந்து விடுதலையாகி, வயது சென்றதில் இருந்து விடுதலையாகி, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாகி தேவனுடைய மகிமையில் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட சமூகத்தில் என்றென்றைக்கும் ஜீவிப்போம். ஆமென். அது உங்களை பயமுறுத்தவிடாதிருங்கள். நான் இப்பொழுது பக்தியாய் உணருகிறேன். நான் நிச்சயமாய் உணருகிறேன்.சரி. "என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும், என் மாமிசத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்; அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்". எனக்கு பைத்தியம் என்று நினைக்க வேண்டாம். நான் பைத்தியம் அல்ல நான் பைத்தியமாய் இருந்தால் அப்படியே விட்டுவிடுங்கள். அந்த வழியைக் காட்டிலும் இந்த வழியில் அதிக சந்தோஷமாய் இருக்கிறேன்; என்னை விட்டுவிடுங்கள். நிச்சயமாக உலகத்திற்கு பைத்தியம். ஏனென்றால், உலகம் பைத்தியம் என்று அழைக்கின்ற அந்த காரியங்களை தேவன் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அழைக்கிறார். இந்த உலகத்தின் மேல் உங்கள் சிந்தையை இழக்க வேண்டும். ஏன்? நீங்கள் இந்த உலகத்தார் இல்லை. 62. அந்த வேறுபிரிக்கும் கோட்டினை கடக்கும் போது நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தின் உடன் குடிமகனாய் ஆகிறீர்கள். ஓ, என்னே, அது எவ்வளவு நல்லது. ஏன்? நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக ஆகிறீர்கள். (ஒ. என்னே). இப்பொழுது நீங்கள் என்னவாக இருக்கின்றீர்களோ அதில் இருந்து மாற்றப்படுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரராய் இருக்கின்றீர்கள். இப்பொழுது நாம் ஒன்றாக உன்னதத்தில் உட்கார்ந்திருக்கிறோம். ஆயிர வருட அரசாட்சியில் அல்ல; இப்பொழுதே நாம் சரியாக இப்பொழுதே தேவனுடைய குமாரர்களாய் இருக்கிறோம். சரியாக இப்பொழுதே உன்னதத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். சபைக்குள்ளாக அல்ல கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக நாம் இருக்கிறோம். உயிர்தெழுந்த கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார். அவர் இங்கே அவருடைய வல்லமையில் இருக்கிறார். அவர் இங்கே மீட்பின் வல்லமையில் இருக்கிறார். அவர் இங்கே யாத்திரைக்காக இருக்கிறார். எல்லா சபை அங்கத்தினரையும் அவரோடு ஐக்கியத்திற்குள் கொண்டு வர அவர் இங்கே இருக்கிறார். நீங்கள் எவ்வளவுதான் கீழ்த்தரமாய் இருந்தாலும் ஒவ்வொரு பாவியையும் கொண்டு வர அவர் இங்கே இருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்த வல்லமையை உங்களுக்குள் கொண்டு வந்து; உங்களை புதிய சிருஷ்டியாக ஆக்க அவர் இங்கே இருக்கிறார். 63. இங்கே ஒரு சில வருடங்களுக்கு முன்னர் உலகத்தின் எல்லா மதங்களும் ஒன்று கூடின. நான் இங்கிலாந்திலுள்ள லண்டன் என நினைக்கிறேன்; அல்லது வேறு எங்கோ எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் பல வித்தியாசமான சபைக்காக பேசினர்; முகமதியர், புத்தர் மற்ற எல்லோரும். அமெரிக்க ஹோலினஸ் சபைக்கு ஒரு சிறிய நபர் ஜான் விட் என்பவர் பிரதிநிதியாய் வந்தார். அது தான் அவர் பெயர் என்று நினைக்கிறேன். ஆக எல்லா மதங்களும் பிரதிநிதித்துவம் அளித்திருந்த இந்த மகத்தான கூடுதலில் அப்பொழுது பேசுவதற்கான அவருடைய நேரம் வந்தபோது அவர் மக்காபீ அம்மாவைப் பற்றி கூறினார். அவள் எவ்வளவு மட்டமானவள். அவள் வாயில் வைத்த சுருட்டுடன் வேகக் கட்டுபாடு விதியை மீறி வீதிகளில் குதிரை பூட்டப்பட்ட கோச் வண்டியை ஓட்டிச் சென்றாள். ஒக்லமாவில் கைது செய்யப்பட்டாள். அவள் அநேக கொலைகளைச் செய்தாள். மிகவும் அசுசி ஆனவள். அவ்வளவு மோசமானவளாகி அவளுக்கு தார் பூசி சிறகுகள் சொருகச் சென்ற போது அவர்களுடைய கரங்களை அவள் மேல் வைக்க மறுத்தார்கள். தாங்கள் கெட்டுப் போய்விடுவோமோ என்று பயந்தார்கள். அவர் அந்த கதையை ஒரு நல்ல நாடகமாய் எடுத்து கூறிய போது அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த அனைவரும் அவர்களின் இருக்கையின் நுனிக்கு வந்துவிட்டார்கள். அவர், “இந்த உலகத்தில் உள்ள மதங்களின் கனவான்களே! அந்த மக்காபீ அம்மாவின் கரங்களை சுத்தப்படுத்தக் கூடிய ஏதாவது காரியத்தை உங்களுடைய மார்க்கம் உடையதாய் இருக்கிறதா?”, என்றார். ஒருவரும் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர் அப்படியே ஆகாயத்தில் உயரக் குதித்து, அவர் இரண்டு குதிகால்களும் ஒன்று சேர உதைத்து, கரங்களைத் தட்டி அவர், “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவளுடைய கரங்களை சுத்தப்படுத்த மட்டும் அல்ல அவளுடைய இருதயத்தைக் சரியே. கூட கழுவும்”, என்றார். ஆமென். அது சரியே. 64. கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லில் இருக்கும் ஒரு மட்டமான விபச்சாரியை இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எடுத்து அவளை ஒரு சீமாட்டியாக, ஒரு பரிசுத்த ஸ்திரீயாக ஆக்கும். அங்கே எங்கேயோ இருக்கிற ஒரு கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவனை எடுத்து அவனை ஒரு கனவனாக, தேவனுடைய பரிசுத்தவானாக உண்டுபண்ணும். என்னுடைய நண்பர்களே, இராஜ்ஜியத்தின் உடன் குடிமக்களே; கென்டக்கி, இந்தியானா, இன்னும் சுற்றுப் புறங்களில் உள்ள என்னுடைய உடன் மனிதர்களே உங்களுடைய கடைசி தருணம் வருவதற்கு முன்னர் இந்த கர்த்தாராகிய இயேசுவை அறிந்து கொள்வதற்கு இது சரியான தருணம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? 65. சபையானது இந்த மகத்தான யாத்திரையில் போய்க் கொண்டிருப்பதை நீங்கள் காணும்போது, அக்கினிஸ்தம்பம் நமக்கு முன்பாக இருந்து நடத்துவதைக் காணுங்கள்; நின்று கொண்டு அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கிறது. அவருடைய எல்லா மீட்பின் வல்லமையுடன் இன்று இரவு அவர் இங்கே இருக்கிறார். ஒவ்வொரு பாவியையும் சரியாக்கவும், ஒவ்வொரு பின்வாங்கிப் போனவனையும் திரும்பக் கொண்டு வரவும் ஒவ்வொரு சுகவீன நபரையும் சுகப்படுத்தவும் அவர் இங்கே இருக்கிறார். அவரே முழு சுவிசேஷமாய் இருக்கிறார். நாம் முழு சுவிசேஷ த்தைப் பிரசங்கிக்கிறோம்; முழு ஆட்டுக் குட்டியையும் புசிக்க வேண்டும். அதை பரிசுத்த ஆவியில் சுடும் போது உண்பதற்கு அது நல்லது என அறிந்திருக்கிறீர்கள். ஏனென்றால் அது உண்மையாக நல்லது என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு பகுத்துக் கொடுத்திருக்கிறார். “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அது கன்மலையில் உள்ள தேனைப் போன்று அது ருசிக்கும்”. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய அன்பிலும், வல்லமையிலும், அவருடைய மகத்தான மீட்பின் ஆசீர்வாதங்களோடும் இங்கே இருக்கிறார். ஓ, இந்த இரவில் அவர் எவ்மதமாக சபைக்கும் பாவத்திற்கும் இடையே நிற்கிறார். அவர் எப்படியாக உங்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே இரத்தம் கசிந்து கொண்டும், ஜெபித்துக் கொண்டும் இருக்கிறார். 66. இங்கே அதிக நாட்களுக்கு முன்பு அல்ல நான் ஓஹியோவில் ஒரு இடத்திற்கு கடந்து சென்றேன். அங்கே நான் என்னுடைய தீர்ப்பின் கருத்தை கூறப் போகும் நேரத்தில் இருந்தேன். ஒரு சிறிய டன்கார்டு (DUNKARD) உணவகத்தில் நான் சாப்பிடுவது உண்டு. எங்களுக்கு ஒரு மகத்தான கூட்டம் இருந்தது. அந்த நாட்டிலிருந்து அநேக மைல்களுக்கு அப்பால் வெளியில் ஒரு சிறிய பயணப்பாதை தங்கும் விடுதியில் (MOTEL) நான் தங்க வேண்டியதாக இருந்தது. நான் ஒரு டன்கார்டு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அருமையான ஜனங்கள் ஞாயிற்றுக் கிழமையில் மூடிவிட்டு சபைக்குச் செல்வார்கள். ஆகவே நான் சற்று தூரம் கடந்து சென்று ஒரு சாதாரண அமெரிக்க உணவகத்திற்கு என்னுடைய போஜனத்திற்காகப் போக வேண்டியதாக இருந்தது. நான் வாசலின் ஊடாக நடந்து சென்ற போது நான் ஆச்சரியப்படும்படி அங்கே ஒரு மாநில காவலர் ஒருவர் ஒரு பெண்ணின் மேல் கரத்தைப் போட்டவனாய் சூதாட்ட இயந்திரத்தில் (SLOT MACHINE) ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தான். இப்பொழுது ஓஹேயாவில் சூதாட்டம் சட்ட விரோதமானது. அங்கே சட்டத்தை காக்க வேண்டியவனே சட்டத்தை உடைத்துக் கொண்டிருந்தான். ஒருக்கால் என்னுடைய வயதுள்ள மனிதன் ஒரு வேளை திருமணமானவனாக இருக்கலாம். ஒரு குடும்பம் எங்கோ இருக்க அவன் கரத்தை ஒரு வாலிபப் பெண்ணின் மேல் போட்டவனாக நின்று கொண்டிருந்தான். நான் உணவகத்தில் பின்னாகப் பார்த்தேன். அங்கே சில பையன்கள் பின்னாக உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வாலிப ஸ்திரீ குடித்துக் கொண்டு முறைகேடாய் நடந்து கொண்டு இருந்தாள். அங்கே உட்கார்ந்துக் கொண்டு வலது பக்கமாய் இருந்த ஒரு சிறிய கடையைப் பார்த்தேன். அங்கே நான் உட்கார ஆயத்தமாய் இருந்தேன். அங்கே வயதான ஒரு சீமாட்டி சுமார் 58 அல்லது 60 வயது இருக்கலாம். என்னுடைய தாயார் போன்று வயது சென்றவள். தோல் எல்லாம் சுருக்கம் விழுந்தவளாய் மிகவும் குட்டையான ஆடை அணிந்தவளாய் அங்கே உட்கார்ந்திருந்தாள். அது பயங்கரமாய் இருந்தது. அவளுடைய கால் நகங்களில் இந்திர நீலம் (PURPLE) பூசப்பட்டு இருந்தது. அவளுடைய உதடுகளில் இந்திர நீலம் வர்ணம் பூசப்பட்டு இருந்தது. நீங்கள் பார்த்திராத கோரமான காட்சியாய் இருந்தது. அவளுடைய தலைமயிர் குட்டையாய் வெட்டப்பட்டு இருந்தது. இந்த விதமாய் ஓரமெல்லாம் மேலே தூக்கினது போன்று இருந்தது. அவள் குடித்துக் கொண்டிருந்தாள். அங்கே அவளோடு இரண்டு ஆண்கள் உட்கார்த்திருந்தனர். பயங்கர தோற்றம் உடையவர்களாய் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் மேசையின் மேல் இருந்த இடத்தில் அப்படியே படுத்துக்கிடந்தான். அவர்கள் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு கழிப்பறைக்குச் சென்றனர். 67. நான் அங்கே நின்றேன். ஓ. தேவனே உம்மால் இதை எப்படி சகித்துக் கொண்டிருக்க முடிகிறது?. அதைப் போன்ற ஒன்றை உம்மால் எப்படி பார்க்க முடிகிறது? என்று நினைத்தேன். என்னுடைய இருதயத்தில் நானும் அவ்வளவு மோசமாக இருந்தபோதிலும் என்னுடைய சிறிய சாராளும், ரெபெக்காவும் இப்படிப்பட்ட தலைமுறை வருகின்றதைக் காணும்படியாக வளர்க்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்களே என்று நான் வியக்கின்றேன். கர்த்தாவே பூமியின் மேல் இருந்து ஏன் இதை அழித்துப் போடக் கூடாது, நீர் ஏன் இதை செய்யக் கூடாது? கர்த்தாவே! என்று எண்ணினேன். நான் அங்கே உட்கார்ந்து அழத் தொடங்கினேன். நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். நான் காண்கையில் ஆகாயத்தில் உலகமானது சுழன்று கொண்டு இருந்தது. அங்கே ஒரு வானவில் உலகத்தைச் சுற்றி இருந்தது. யாரோ என்னிடத்தில் பேசி. “இந்த உலகத்தை சுற்றி இருக்கிறதே அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம்: அவர் உலகத்தை அழித்துப் போடாதபடி அது காத்துக் கொள்கிறது”. தேவனால் பாவத்தைக் காணமுடிந்தால், ‘அதைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவீர்கள்’, அந்த இரத்தத்தின் கீழாக இருக்கின்ற எல்லா மனிதனும் அவனுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை செய்யும்படியாக இருக்கிறான். ஆனால் நீங்கள் மரித்து உங்களுடைய ஆத்துமா அந்த இரத்தத்தின் கிருபையைத் தாண்டி போகுமானால் நீங்கள் அங்கே போய் சேருவதற்கு முன்பாகவே நீங்கள் ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டாயிற்று. உங்களுக்காக எதுவும் விடப்பட்டு இருக்கவில்லை என்று கூறினது. 68. அதன் பின்பு நான் என்னைப் பார்த்தேன் என்னுடைய கர்த்தரானவர் அவர் தலையில் முள்முடி சூடினவராக கண்ணீர் இரத்தத்தோடு கலந்து அவர் தாடியின் ஊடாக வடிந்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். என்னுடைய பாவங்கள் அவருக்கு முன்பாக வருகிறதை நான் கண்டேன். அவருக்கு நடுக்கம் உதடாகும் படி ஒவ்வொரு முறையும் அவருக்கு முன்பாக வந்தது. (டேப்பில் காலியிடம்) முட்கள் அவர் நெற்றியில் அதிகமாகக் குத்தும். அவர் அப்படியே பின்னிட்டு தள்ளாடி, “பிதாவே அவனுக்கு மன்னியும், அவன் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறான்”, என்று கூறுவார். மறுபடியும் ஏதாவது காரியம் செய்வேன். ஆனால் அவருடைய இரத்தம் மோட்டார் வாகனத்தில் இருக்கும் பம்பர் வாகனத்தைக் காத்துக் கொள்வது போன்று தேவனுடைய கோபத்தில் இருந்து தகுதியற்றவனான என்னை மறைத்துக் கொண்டது. நான் மெதுவாக அவரிடத்தில் வந்து அவரிடத்தில் முழங்கால் படியிட்டேன். அங்கே கீழே நோக்கிப் பார்த்த போது எனக்கு முன்பாக பழைய பாவத்தின் புத்தகம் இருந்தது. அதில் என்னுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது. நான், “கர்த்தாவே நீர் என்னை மன்னிப்பீரா?”, என்றேன். நேசிக்கும் கண்களோடு அவர், “நிச்சயமாக”, என்று கூறி அவருடைய விலாப் பக்கத்திலிருந்து கொஞ்சம் இரத்தத்தை எடுத்து அதன் மேல், “மன்னிக்கப்பட்டது”. என எழுதினார். அதை அப்படியே எடுத்து பின்னால் உள்ள மறதிக் கடலில் தூக்கி எறிந்தார். நான், “உமக்கு நன்றி கர்த்தாவே”, என்றேன். அவர், “இப்பொழுது உனக்கு மன்னிக்கிறேன். நீயோ அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறாய்”, என்றார். ஒ, அது எனக்கு காட்சியை மாற்றியது. 69. நான் அந்த தரிசனத்தில் இருந்து வெளியே வந்தேன். நான் நேராக நடந்து போய் அவளண்டை உட்கார்ந்து பேசத் தொடங்கினேன். அவளுடைய கடந்த கால ஜீவியம் கரடுமுரடாய் இருந்தது. “நீ ஒரு கிறிஸ்தவனாய் இருந்ததே இல்லையா?” என கேட்டேன். அதற்கு அவள், “நான் ஒரு கிறிஸ்தவ வீட்டிலே வளர்க்கப்பட்டேன்”, என்றாள். நான், “என்ன சம்பவித்தது”, என்றேன். அவள் புருஷனோடு உண்டாயிருந்த தப்பிதத்தைக் கூறி; எப்படி பிள்ளைகள் முதலானவற்றைக் கூறினாள். நான் அவளிடத்தில், “நீ தேவனை சந்தித்தது முதல் இந்த வருடங்களில் எல்லாம் சமாதானமாக ஜீவிக்கவில்லையா?”, என்றேன். “ஐயா. அது உண்மை”, என்று கூறினாள். அதற்கு நான், “நீங்கள் அவரை இப்பொழுது ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா?”, என்றேன். அதற்கு அவள், “அவர் என்னை ஏற்றுக் கொள்வாரா?” என்றாள். நான், “அவர் தான் இப்பொழுது உன்னுடைய இருதயத்தில் தட்டிக் கொண்டு இருக்கிறார்”. என்றேன். அந்த கடைக்கு வெளியே அங்கே தரையில் அங்கு கூடியிருந்த ஜனங்கள் முன்பாக முழங்கால்படியிட்டோம். ஸ்லாட் இயந்திரம் தின்றுவிட்டது. அசுசியான சபித்தல் நின்றுவிட்டது. மற்ற எல்லா காரியமும் நின்றுவிட்டது. நான் என்னுடைய கரங்களை உயர்த்தி அவளுடைய சுருக்கங்கள் விழுந்த கரங்கள் உயர்த்தப்பட அவளை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினேன். அது சரி. அதுதான் காரியம் நண்பர்களே! எதையும் பார்க்காதிருங்கள். இயேசுவையே நோக்குங்கள். நீங்கள் என்ன செய்திருந்தாலும் உங்களுடைய பாவங்கள் எவ்வளவு கருமையாய் இருந்தாலும் உங்களுடைய ஜீவியம் எப்படி இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று இரவு நின்று கொண்டு; உங்கள் இருதயத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டு; நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு மன்னிக்கும்படி நின்று கொண்டு இருக்கிறார். 70. ஒரு நிமிடம் நம் தலைகளை வணங்குவோமாக. சகோதரியே அங்கே ஆர்கன் அருகில், வருவீர்களா? பரலோகப் பிதாவே ஓ இந்த கட்டிடத்தில் பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டு இருக்கையில் நீர் கிரியை செய்ய வேண்டும் என நான் ஜெபிக்கிறேன். உம்மிடத்தில் இருந்து தயவைப் பெற்றுக் கொள்ள முதலாவதாக இராஜ்ஜியத்தைத் தேடுவோமாக. அதன் பிறகு வியாதியஸ்தரை சுகப்படுத்துவீர் என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்பொழுது பிதாவே அங்கே மகத்தான ஆழமான ஒரு சிரத்தையும், ஒருவகை உணர்த்துதலும் இருக்கின்றதாக உணர்கையில், உம்முடைய சபையானது யாத்திரையில் இருக்கிறது என்றும் நாங்கள் நியாயத்தீர்ப்பை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம் என்பதையும் ஜனங்கள் அறிந்து இருக்கிறார்கள். அறியாமல் இருந்து, ஆனால் காலையில் யாராவது படுக்கையின் பக்கத்தில் வர அப்பொழுது போய்விட்டவர்களாய் கிடப்போம். நாளை இரவு இந்த நேரத்தில் இங்கேயே எங்காவது ஒரு சவக்கிடங்கிலும், நம்முடைய ஆத்துமா அக்கரையில் நித்தியத்திலும் இருக்கலாம். ஒ!, தேவனே இது ஒருக்கால் கடைசி வேளையாய் இருக்கலாம். மனிதர்கள் பெறுகின்ற கடைசி தருணமாய் இது இருக்கலாம். வாஞ்சித்தவர்களாயும் ஒரு சாதாரண நல்ல ஜீவியம் ஜீவித்தவர்களாயும் இருக்கிற அதேக புருஷர்களும் ஸ்திரீகளும் அனேகர் இங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் மறுபடியும் பிறவாமலே இருந்து; பரிசுத்த ஆவியால் நிறைந்து முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்கப்பட்ட ஜீவியம் என்ன என்பதை அறியாதவர்களாய் எல்லா வெட்கப்படுதலும், இலகுவாக குழப்பம் அடைவதும், அவர்களிலிருந்து எடுக்கப்பட்டு அவருடைய இரக்கத்திற்குள் தேவனுடைய ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுப்பாராக. பிதாவே, அன்புள்ளவரே உமது அன்பார்ந்த குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் அசைவாடி இப்பொழுது அவர்களுடன் பேசுவீராக. அவர்களுடைய சிந்தனைகளை உம் மீது எழுப்புவீராக. “இதோ நான் இருக்கிறேன் இயேசுவே நான் இருக்கிற வண்ணமாக என்னை எடுத்து உருவாக்கி என்னை வித்தியாசமானவனாக்குவீராக. நான் என்னவிதமாக இருக்க விரும்புகிறீரோ அந்தவிதமான மனிதனாக என்னை ஆக்கும். என்னுடைய ஜீவிய காலம் முழுவதுமாக நீர் என்னோடு பேசினீர். நீர் என்னிடத்தில் பேசியிருக்கிறீர். வித்தியாசமானவைகளை நான் செய்யும்படி முயற்சித்தீர். அந்த ஒப்புவித்தலை நான் செய்யும்படி என்னை ஆக்க முயற்சித்தீர்; ஆனால் என்னுடைய நாட்கள் அதிகம் கடந்துவிட்டது. கர்த்தாவே, என்னோடிரும். நான் இப்பொழுது வருவதற்கு ஆயத்தமாய் இருக்கிறேன் என்று கூறும்படியாக அவர்களுடைய எளிமையான இருதயத்தை உயர்த்துவீராக. அதை அளியும் பிதாவே, நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கமானது அழைத்துக் கொண்டு இருக்கும் போது; சபையானது எகிப்தை விட்டு வெளியேறிப் போகின்றபோது; அவர்கள் தாமே வந்து வெளியே அழைக்கப்பட்ட மகத்தான குழுவோடு செல்லுவார்களாக. இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். 71. நமது தலைகள் தாழ்த்தப்பட்டும், கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டும் கண்கள் மூடியும் இருக்கும்போது நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், என்னை நினைவு கூறும் என்று”, இந்த விதமாகச் சொல்லுவீர்களா என்று வியக்கிறேன். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாங்கள் யாவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டியது இருக்கிறது. நான் ஒரு சபை அங்கத்தினனாய் இருந்தேன். நானோ இன்னும் நிரப்பப்படவில்லை. அல்லது நீ ஒருக்கால் ஒருபோதும் சபைக்கு போகாத நபராக இருக்கலாம். ஒருக்கால் ஒருபோதும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத ஒரு பாவியாய் இருக்கலாம் அல்லது சபை அங்கத்தினராய் இருந்து மறுபடியும் பிறவாதவராய் இருக்கலாம். தக்கன் கரத்தை உயர்த்தி ரான் ஜெடத்தில் என்னை நினைவு கூறுங்கள் சகோதரன் பிரான்ஹாம் நான் சரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுவீர்களா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உம்மை, உம்மை, உம்மை, உம்மை என் சகோதரனே உம்மை, சகோதரியே. உம்மை சகோதரனே, உம்மை, உம்மை, உம்மை, சகோதரனே, சகோதரியே. நான் காண்கிறேன்.” என்னுடைய இடது பக்கமாக இங்கே எத்தனை பேர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள், சகோதரன் பிரான்ஹாம் நான் பிறக்கும்படி விரும்புகிறேன் என்னை நினைவு கூறுங்கள் என்று சொல்லுங்கள். 72. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவு கூறுவீர்களாக. நான் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தால், நான் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக இங்கே இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டு இருக்கிறார் என்று நான் அறிவேன். நண்பர்களே, நான் உங்களுக்கு வினோதமானவனாக இருக்கலாம். ஆனால் நான் ஒரு மத வைராக்கியன் அல்ல. நான் என்ன பேசுகிறேனோ அதை அறிந்திருக்கிறேன். அங்கே உங்களுடைய தொல்லை என்ன என்பதையும், உங்கள் வியாதி என்ன என்பதையும், நான் அறிந்து இருந்தால்; உங்களுக்காக தேவன் என்னுடைய ஜெபத்தைக் கேட்கிறார். புற்றுநோய், குருட்டுத்தன்மை, செவிட்டுத்தனம், முடம் மற்ற எல்லாவற்றில் இருந்தும் சுகம் ஆக்கப்பட்டவர்கள் இங்கே இந்த கட்டிடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் உலகத்தில் சுற்றியுள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாருங்கள். உங்களை குறித்து இப்பொழுது என்ன? அதை குறித்து இப்பொழுது என்ன? அதற்காக அவர் என்னுடைய ஜெபத்தை கேட்கிறார் என்றால்; உங்களுடைய ஆத்தும நிலையைப் பற்றிய என்னுடைய ஜெபத்தைக் கேட்க மாட்டாரா? உங்களுடைய தொல்லை எங்கே இருக்கிறது என்று அவர் எனக்கு வெளிப்படுத்துகிறார் என்றால் இப்பொழுது உங்கள் தொல்லை எங்கே இருக்கிறது என்று கூட அவர் எனக்கு வெளிப்படுத்தமாட்டாரா? இன்னும் எத்தனை பேர்கள் கரத்தை உயர்த்தி “சகோதரன் பின்ன்ஹாம் என்னை நினைவு கூறுங்கள். இந்த நேரத்தில் இரக்கமாய் கேட்கும்படியாக இருக்கிறேன்” என்று கூறுங்கள். இருக்கும்படி தேவனிடத்தில் தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உம்மை, உம்மை, உம்மை, மீண்டுமாய் ஓ என்னே! இந்த கட்டிடம் முழுவதுமாக எல்லா இடத்திலும்! 73. உங்கள் தலைகள் வணங்கினவாறு இருக்கையிலே கரங்களை உயர்த்தியுள்ளவர்கள் இன்னும் அதிகமான கிருபை இருந்து இந்த விதமாக கூறுவீர்கள் என வியக்கிறேன். “கர்த்தாவே, என்னுடைய கரத்தை உயர்த்துவதற்கு எனக்கு போதுமான கிருபை இருந்தது. அவர் ஜெபிக்கும் போது எழுந்து நிற்க எனக்கு போதுமான கிருபையைத் தாரும், இந்த பகல் வெளிச்சத்திற்கு முன்னதாக நீர் எனக்காக வருவீரானால் கர்த்தாவே! இதுதான் அதாவது நான் சரியாக இருக்க விரும்புகிறேன் என்பதே! உமக்கு என்னுடைய அடையாளமாய் இருக்கும். என்றாவது ஒருநாளில் நான் உம்மை சந்திக்க விரும்புகிறேன். இருமலினால் தொல்லைக்குட்பட்டு மரணப் படுக்கையில் நான் இருக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது என்று வைத்தியர் என் படுக்கையின் பக்கத்தில் நின்று போய் விடுவார். அப்பொழுது தேவனே என் ஆத்துமாவின் மேல் கிருபையாய் இரும். மரணத்தின் குளுமையான மூடுபனிகள் அறைக்குள்ளாக மிதந்து கொண்டு வரும்போது அந்த பழைய சீயோன் கப்பல் தாமே அங்கே வந்து என்னை வெளியே கொண்டு போவதாக! கர்த்தாவே, நான் நிற்கப் போகிறேன். அதற்கு அதிகமான கிருபையை எடுத்துக் கொள்கிறது. ஆனால் ஏதோ காரியம் என்னை அசைக்கிறது. நான் நின்று கொண்டிருக்கிறேன்”, என்று கூறுங்கள். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரவது எழுந்து நின்று, “நான் நிற்கிறேன் கர்த்தாவே”, என்று கூறுவீரா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதானே, சகோதரியே. இப்படியே நின்று கொண்டிருங்கள். உங்கள் ஆத்துமா இரட்சிப்புக்காக இந்த ஜெபத்தில் நினைவு கூற வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எழுத்து நிற்பீர்களா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, வாலிபனே! தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே. என் சகோதரியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உம்மை, சகோதரனே! வேறு யாராவது எழுந்து நின்று “இப்பொழுது இதோ நான் இருக்கிறேன் சகோதரன் பிரான்ஹாம் நான் உமக்கு முன்பாக நின்று கொண்டிருக்கவில்லை. நான் தேவனுக்கு முன்பாக நிற்கிறேன். ஏதோ காரியம் என்னிடத்தில் எழுந்து நில் என கூறியது. நான் நிற்கிறேன்”. என்று கூறுவீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா? நீங்கள் கால் ஊன்றி நில்லுங்கள். இந்த அளவிற்கு தேவனை எடுத்துக் கொள்ளுங்கள். சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 74. அங்கே ஏராளமாக உள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சீமாட்டியே. அது சரி. பரிதாபத்திற்குரிய தாயார் தன் சிறு குழந்தையைப் பற்றிக் கொண்டு எழுந்திருக்க முயற்சிக்கிறார்கள். கண்களில் கண்ணீர் இருக்கிறது. நீங்கள் வரமாட்டீர்களா? மீண்டுமாய் எழுந்து நில்லுங்கள். சீமாட்டியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே நிற்கிற முத்த சீமாட்டியே உண்மையில் மூத்தவர். இந்த நாட்களில் ஒன்றில் தேவனை சந்தித்து ஆகவேண்டும் என்பதை அறிந்தவளாய் எழுந்து நிற்கிறார்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது யார் அடுத்ததாக எழுந்து நின்று, “நான் நிற்பேன்”, என்று சொல்லப் போகிறார்கள். ஜெபத்திற்காக தொடர்ந்து நில்லுங்கள். வேறு யாராவது உண்டா? அங்கே வேறு யாரோ எழுந்து நிற்க விரும்புவது போன்று நான் உணருகிறேன். ஒருக்கால் நீங்கள் சற்று நெருங்கி வர விரும்பலாம். இனிமேலும் அதைத் தள்ளிப் போடாதிருங்கள். எழும்பி நில்லுங்கள். நீங்கள் அதை செய்வீர்களா? தேவனுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிற உங்களைத்தான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே! வேறு யாராவது... தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே. ஆம், ஐயா. அங்கு குறைந்தது மூன்று பேர் இருக்கிறார்கள். நான் நேராக அவர்களை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் நின்றாக வேண்டும். ஏனென்றால் தேவனுடைய தூதனானவர் அங்கே இருக்கிறார். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே அது சரி. இப்பொழுது சரியா, சகோதரனே, அதைக் குறித்து என்ன? சரி. கர்த்தருடைய தூதன் நின்று கொண்டு இருக்கிறார், என்று எனக்குத் தெரியும். நான் அதைக் காண்கிறேன். யாரோ இப்பொழுது எழுந்து நின்றாக வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் இன்னும் ஒரு நிமிடம் கூடுதலாகக் காத்திருக்கப் போகிறேன். அவர் உன்னுடைய இருதயத்தில் தள்ளிக் கொண்டு இருக்கிறார் என்று உமக்குத் தெரியும், என் நண்பனே அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். உங்களை எழுந்து நிற்கும்படி வொல்லுகிறது அவர்தான். நீங்கள் அதை செய்ய மாட்டீர்களா? வெறுமனே எழுந்து நின்று அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுதே.சரி. இப்பொழுது நீங்கள் நிச்சயமாக இருக்கிறீர்களா. இந்த கூட்டத்தில் இன்று இரவு தேவன் அழைப்பாரானால் இந்த பிரசங்கம் இந்த அழைப்பு நீங்கள் மரிக்கும் போது அக்கரையில் சந்திக்கப் போகிறதாய் இருக்கிறது. அப்போது அதைக் குறித்து என்ன செய்வாய்? நீங்கள் நிச்சயம் இல்லாதவர்களாய் இருந்தால் ஏற்றுக் கொள்ள மனது இல்லாதவர்களாய் இருந்தால் இப்பொழுது நில்லுங்கள். ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் வெளிச்சத்தில் நடக்கவும் விரும்புகிறீர்கள் என்பதை அவர் காண்பார். 75. இப்பொழுது எங்கள் அன்பான பரலோகப் பிதாவே, இவர்கள் உம்முடைய அன்புள்ள பிள்ளைகள், மிருதுவான அவர்களுடைய இருதயங்களில் இன்று இரவு வார்த்தை விழுந்து இருக்கிறது. “விசுவாசம் கேள்வியினால் வரும். தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் வரும்”. அவர்கள் செவிகளில் கேட்கலாம். நீர் அவர்களுடைய இருதயங்களை மிருதுவாக்கும். அநேகர் நின்று கொண்டு இருக்கிறார்கள். புருஷர்களும், ஸ்திரீகளும், பையன்களும், சிறுமிகளும், உம்மை அவர்களுடைய சொந்த அருமையான இரட்சகர் என்றும், தலைவர் என்றும் அறிக்கை செய்கிறார்கள். இப்பொழுது இன்று இரவு இங்கே இருக்கின்ற தேவனுடைய தூதன்தாமே அவர்களுடைய ஜீவிய காலமெல்லாம் வழி நடத்துவாராக. அவர்கள் தாமே இப்பொழுது அவர்களுடைய இருதயத்தில் கல்வாரிக்கு வழி நடத்தப்பட்டு, இயேசுவை அவர்களுடைய இரட்கராக ஏற்றுக் கொள்வார்களாக. பரிசுத்த ஆவியானவர் தாமே கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அவர்களுடைய ஆத்துமாவில் இறங்கி அவர்களுடைய பொறுப்பற்ற காரியங்களை வெளியே எடுத்துப் போட்டு அவர்களை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்புவீராக. அவர்களுடைய ஜீவியத்தில் இது ஒரு மகத்தான இரவாக இருப்பதாக. அதை மகத்தானது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனென்றால் இந்த இரவிலேயே அவர்கள் உம்மை ஏற்றுக் கொள்வார்களாக. இதை இப்பொழுதே அளியும் கர்த்தாவே, இன்றிரவு அவர்கள் இங்கிருந்து அவர்களுடைய முழு இருதயத்துடன் சந்தோஷமாக களிகூர்ந்து கொண்டு தேவனைத் துதித்துக் கொண்டு அவர்களுடைய வீடுகளுக்குப் போவார்களாக. நான் இந்த ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். நீங்கள் உட்காருகையிலே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 76. இப்பொழுது எழும்பி நின்ற ஒவ்வொருவரையும் நான் கேட்கிறேன். நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கையில் ஏதோ காரியம் உங்களுக்கு சம்பவித்தது என்று உங்களுக்கு தெரியுமானால், கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். ஏதோ காரியம் சம்பவித்தது என்று தெரியும் என்பவர்கள் வெறுமனே கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே! அது இருந்தாக வேண்டும், நண்பர்களே. அது இருந்தாக வேண்டும். நான் நின்று பேசிக் கொண்டு இருந்த போது, நான் சொல்லிக் கொண்டிருந்த அதே தூதன் இங்கே இப்பொழுது நிற்கக் கண்டேன். இந்த கட்டிடத்தினூடாக போய்க் கொண்டு இருக்கிறார். ஏவுதலினால் நான் கடந்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களாக பிரசங்கித்துக் கொண்டிருந்த அதே கர்த்தருடைய தூதனானவர், அக்கினி ஸ்தம்பமானவர். நாள் அதை உணருகிறேன். அவர் இந்த கட்டிடத்தினூடாக அசைந்து செல்லுகிறதை நான் காண்கிறேன். இப்பொழுது நான் ஏதோ கதை சொல்லுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சத்தியமாயிருக்கிறது. இப்பொழுது நான் ஜெப வரிசையைக் கூட அழைப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இங்கேயே நின்று நான் உங்களிடத்தில் உண்மையைத்தான் கூறினேன் என்பது சரியே என்று அடையாளங்களோடும். அற்புதங்களோடும் தேவன் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 77. இங்கே உள்ளே இருக்கின்ற வியாதியாய் உள்ளவர்கள் எத்தனை பேர்கள் சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? நீங்கள் எங்கே இருந்தாலும் கரங்களை உயர்த்துங்கள். “நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்”, என்று உங்கள் கரங்களை உயர்த்திக் கூறுங்கள். எல்லாம் சரி. நீங்கள் கண்டு, ஜீவித்து, விசுவாசியுங்கள். இங்கே குழுமியுள்ள கூட்டத்தாரில் இதனூடாக யாரோ பாருங்கள், “கர்த்தராகிய இயேசுவே” என்கிறார்கள். இதைப் போன்று நான் முதலாவதாக பீட அழைப்பை விடுத்ததற்கு காரணம் நாம் அவரிடம் தயை பெற்றாக வேண்டும். இது எனக்கு ஏதோ காரியம் புதிதாக இருக்கின்றது. நான் முதலாவதாக தேவனிடத்தில் தயை பெற்றிருந்தால்; ஒரு தயவைச் செய்தார். உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் ஆத்துமாக்கள் அப்பொழுதே அவரிடத்தில் வரும். நிச்சயமாக, நிச்சயமாக... 78. இப்பொழுது அப்படியானால் கிறிஸ்துவினிடத்தில் வரும், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நல்ல பரிசுத்த ஆவியால் நிறைந்த ஒரு சபையைக் கண்டுபிடித்து அங்கு செல்லுங்கள். அங்கே பெற்றுக் கொள்ளும் வரைக்குமாய் அவருடைய ஆவியின் அபிஷே கத்தை நாடுங்கள். வெறுமனே செல்லுங்கள். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பகலும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள். அப்படியாக நீங்கள் நோக்கிக் கொண்டிருக்கும் போது... இப்பொழுது வியாதியாய் இருக்கிற ஜனங்களாகிய உங்களைத்தான்; நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருந்தால் தேவன் அது சத்தியமாக இருக்கிறது என்று சாட்சி பகருவார். அது உண்மையாய் இருந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். நீங்கள் மட்டும் ஜெபித்து உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தேவன் அதை அறியும்படி செய்வார். வெறுமனே நோக்கிப் பார்த்து இதைக் கூறுங்கள். 79. எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறு பிள்ளையாய் இருந்ததிலிருந்து என்னைப் பின்தொடர்ந்து வந்து தரிசனங்களைக் காண்பித்தவர், இண்டியானாவிலுள்ள கிரீன்மில் என்கிற இடத்தில் என்னை சந்தித்த கர்த்தருடைய தூதன், “நீ உத்தமமாய் இருந்து, ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படியாய் செய்தால்: உன்னுடைய ஜெபத்திற்கு முன்னால் ஒரு காரியமும் நிற்க முடியாது”, என்று கூறினார். இப்பொழுது, அவரால் அங்கு செய்ய முடிந்ததை அவரால் இப்பொழுதும் அதையே திரும்பவும் உங்களுக்குச் செய்ய முடியும். அவர் மரித்தோரிலிருந்து எழும்பி இருக்கிறார். அங்கே அவருக்கு முன்பாக கூடியிருந்தவர்களிடம் உங்கள் ஒவ்வொருவர் மேலும் என்ன இருக்கிறது என்றும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் உங்களுடைய தொல்லை என்னவென்றும் அதை குறித்து எல்லா காரியத்தையும் அவர் அறிந்து இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். 80. ஒரு வாலிப மனிதன் இங்கே உட்கார்ந்து கொண்டு விசுவாசிக்கிறதை (முயற்சிக்கிறதை) நான் கவனிக்கிறேன். உனக்குள்ள கோளாறு என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? நீ சொல்வாயா? அவர் அப்படிச் செய்தால் உன்னுடைய சுகத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? உனக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. சரிதானே? அதிலிருந்து இப்பொழுது நீ சுகமாக்கப்பட்டிருக்கிறாய் என்று நான் உன்னிடத்தில் கூறினால். எப்படி இருக்கும்? நீ அதை விசுவாசிப்பாயா? ஒரு நிமிடம் எழும்பி நில். உனக்கு ஒரு நரம்புத்தளர்ச்சியடைந்த இருதயம் இருக்கிறது. ஒரு முனுமுனுக்கும் இருதயம் இருக்கிறது. சிறிது காலமாக அது உனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீ போய் படுக்கும்போதும் கூட இருதயம் முன்னும் பின்னுமாக அடிக்கிறது. படபடக்கிறது. அது சரிதானே? ஏனென்றால் அது உன்னுடைய வயிற்றில் ஒரு அஜீரணத்தை உண்டுபண்ணி நரம்புகளின் வழியாக உயரே வருகிறது. அது உண்மை இல்லையா? இனி அதினால் தொல்லை உனக்கு இருக்காது. இப்பொழுது உன்னிடம் இருக்கின்றதை அப்படியே காத்துக் கொள். நீ வீட்டிற்கு போய் சுகமாய் இருக்கலாம். நான் மனோத்தத்துவத்தில் உன் இருதயத்தை அறியவில்லை. நான் உனக்கு ஒரு பரிபூரணமான அந்நியனாய் இருக்கிறேன். நீ வெறுமனே அங்கே உட்கார்ந்திருக்கும் மனிதனாய் இருக்கின்றாய். அது சரிதானே? என்னுடைய ஜீவியத்தில் நான் உம்மை ஒருபோதும் கண்டதில்லை. உம்மை குறித்து ஒன்றும் எனக்குத் தெரியாது. அது உண்மைதானே! கர்த்தர் இங்கே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா! வாலிப மனிதனே வெளிப்படையாக நான் உன்னை ஒரு காரியம் கேட்கப் போகிறேன். இது உண்மையா அல்லது இல்லையா என்று பார். சில நிமிடங்களுக்கு முன்னர் திடீர் என்று “கொட்டுகிறவன் இடத்தில் இருந்து கொடுக்கின் கூர் போய்விட்டது: நான் பேசத் தொடங்கின போது ஏதோ விநோதமான உணர்வு உன் மேல் உண்டானது. அது உண்மையல்லவா? அங்கே உட்கார்ந்து கொண்டு இருந்தபோது உனக்கு ஒரு விநோதமான உணர்வு உண்டானது இல்லையா. அது சரிதானே? அதே நேரத்தில் நீ என்னை நோக்கிப் பார்த்த அதே நேரத்தில் என் கண்கள் உன்னுடைய பார்வையைப் பிடித்தது இல்லையா? அந்த நேரத்தில் தானே உன்னுடைய இருதயக்கோளாறு சரியாகி அங்கே நீ சுகமாக்கப்பட்டாய். ஆமென். அது சரியாக அப்படியே தான். அவர் இங்கே இருக்கிறார். 81. நான் மனோதத்துவத்தால் உன் சிந்தையை அறியவில்லை. நண்பர்களே! நான் உண்மையைத்தான் பேசுகிறேன். அது சத்தியம் என்பதை தேவன் ரூபகாரப்படுத்துகிறார். அங்கே அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறவரே, நீர் விசுவாசிக்கிறீரா? என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீரா தேவனால்...முன்னால் உள்ள இருக்கையில் முன்பாக உட்கார்ந்து இருப்பவரே உங்களைத் தான் அந்த காரணத்தால் தான் நான் இவ்வளவு நேரமாகப் பேசுகிறேன். அங்கே பின்னாகவும் என்னைச் சுற்றிலும் அதைக் காண்கிறீரா? நான் உம்முடைய ஆவியோடு தொடர்பு கொள்ளும்போது உமக்குள்ள கோளாறு என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால் நீர் விசுவாசிப்பீரா? உம்முடைய சுகத்தை ஏற்றுக் கொள்வீரா? நீர் நிரிழிவு நோய் (DIABETIC) உள்ளவர். அது சரிதானே? அது உண்மை என்றால் உமது கரத்தை உயர்த்தும். எழுந்து நில்லும். உம்முடைய சுகத்தை இப்பொழுது ஏற்றுக் கொள்வீரா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உம்மை முழுவதும் சுகமாக்குவாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 82. விசுவாசம் உள்ளவர்களாய் இருங்கள். இங்கே உள்ளே இருக்கிற யாரோ விசுவாசிக்கிறார். உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசம் உள்ளவர்களாய் இருங்கள். ஒரு நீலநிற சூட்டு அணிந்தவராய் உள்ள ஒரு வாலிபமான மனிதன் உட்கார்ந்திருக்கிறதை நான் காண்கிறேன். அங்கே அது அவருக்கு மேலாக நிற்கிறது. உமக்கு தோல் வியாதி (SKIN DISEASE) இருக்கிறது. இல்லையா, வாலிப மனிதனே? அது சரி இல்லையா? எழுந்து நில்.ஒ, நீர் இங்கே நடப்பவைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு வந்து இருக்கிறீர். அதுசரியா. நல்லது நீர் சுகம் பெற்றவராய் வீட்டிற்குப் போக விருப்பமா? உம்முடைய கரத்தை உயர்த்தி, “கர்த்தருடைய தூதன் நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று கர்த்தராகிய இயேசுவே நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். நான் சுகமாக்கப்பட்டேன் என்று நான் விசுவாசிக்கிறேன்”. என்று சொல். அங்கே அடுத்தவராக இருக்கும் மனிதனே நீர் என்ன நினைக்கிறீர். நீங்களும் கூட விசுவாசிக்கிறீரா? ஒரு நிமிடம் கால் ஊன்றி எழுந்து நான் உம்மை காணும்படியாக நில்லும் உம்முடைய முழு இருதயத்தோடு என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று நீர் விசுவாசிக்கிறீரா? அந்த இருதயக் கோளாறில் இருந்து வெளியேற உனக்கு விருப்பமா? அதுதான் உனக்கு அதைத்தான் இல்லையா? இருந்தது இல் உடையவராய் இருந்தீர் என்று கூறினேன். இப்பொழுது நீர் அதை உடையவராய் இல்லை. நீங்களும் கூட வீட்டிற்குப் போகலாம். அவருக்கு அடுத்து உள்ள மனிதன் அதைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர் ஐயா? உம்முடைய முழு இருதயத்தோடும். விசுவாசிக்கிறீரா? என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீரா? எழும்பி கால் ஊன்றி நில்லுங்கள். உங்கள் முழு இருதயத்திலும் விசுவாசிக்கிறீரா? உமக்கு நரம்புக் கோளாறு (NERVOUSNESS) இருக்கிறது. அது சரிதானே. அது சரிதானா? அது சரி என்றால் உம்முடைய கரத்தை உயர்த்தும். இப்பொழுது நீர் வீட்டிற்கு சுகமாகப் போகலாம். இயேசு கிறிஸ்து உம்மை சுகமாக்குகிறார். 83. அடுத்த மனிதனைக் குறித்து இப்பொழுது, என்ன? அங்கே உள்ள வரிசையில் உட்கார்ந்திருப்பவர், நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? கால் ஊன்றி எழுந்து தில்லுங்கள். தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் தேவனுடைய ஊழியக்காரன் என்றும் என்னை விசுவாசிக்கிறீரா? உம்முடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளும்படி உம்மிடத்தில் என்ன கோளாறு என்று அவர் என்னிடத்தில் கூறுவார் என்று விசுவாசிக்கிறீரா? அது உம்முடைய தொண்டையில் இருக்கிறது. அது சரிதானே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வீட்டிற்கு போய் சுகமாக இருங்கள். சுகமாக்கப்பட வேண்டுமென்று வேறு யாராவது இந்த கட்டிடத்தில் இருந்தால் எழுந்து நின்று சுகமாக்கப்படலாம். தேவனுடைய ஊழியக்காரன் என்று என்னை விசுவாசித்தால் எழும்பி கால் ஊன்றி நில்லுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஸ்திரீகளுக்குள் உள்ள பிரச்சனை, புற்றுநோய். அதோ அது போகின்றது. தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்துங்கள். 84. எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்த கட்டித்தில் இருக்கிற ஒவ்வொரு வியாதியையும் நான் இப்பொழுது கண்டனம் செய்கிறேன். எல்லா பொல்லாத ஆவியையும் வெளியே துரத்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது பொறுப்பேற்று ஒவ்வொரு நபரையும் சுகமாக்குவாராக. ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரத்தை வைத்து, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”, என்று எல்லா இட இயேசு கிறிஸ்து, தேவனுடைய செம்மறி ஆட்டுக்குட்டி உங்கள் இடத்திலும் கூறுங்கள். ஒவ்வொருவரையும் சுகமாக்கும் படியாக இங்கே இருக்கின்றபடியால் களிகூறுங்கள். சந்தோஷமாய் இருங்கள்.